காலம் சென்ற மாதுலுவாவே சோபித்த தேரர் பயன்படுத்திய சுமார் 2 கோடி பெறுமதியான சொகுசு மோட்டார் வாகனம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Image result for மாதுலுவாவே சோபித்த தேரர் virakesari

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, மிரிஹான பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோட்டே நாக விகாரையின் உடதளகந்தே ஆரியரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் குறித்த மோட்டார் வாகனம் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.