ஒலிம்பிக் விழாவுக்கு முன்னர் குழப்பத்தில் பிரான்ஸ் ஒலிம்பிக் குழு

Published By: Nanthini

25 May, 2023 | 09:40 PM
image

(நெவில் அன்தனி)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுவதற்கு இன்னும் 14 மாதங்கள் உள்ள நிலையில் பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் பதிவியிலிருந்து ப்றிஜிட் ஹென்றிக்ஸ் திடீரென இன்று வியாழக்கிழமை (25) இராஜினாமா செய்துள்ளார்.

இதன் காரணமாக பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் குழு குழப்பத்தில் மூழ்கியுள்ளது. இதனை அடுத்து பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் குழுவை ஒன்றிணைந்து செயற்படுமாறு பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் அமேலி ஒளடியா கெஸ்டீரா அறைகூவல் விடுத்துள்ளார்.

பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர் டெனிஸ் மாசெக்லியாவுடன் கடந்த ஒன்றரை வருடங்களாக இடம்பெற்றுவந்த உட்பூசல்கள் மற்றும் பகிரங்க முரண்பாடுகளை அடுத்தே குழுவின் பொதுக்கூட்டத்தில் வைத்து திடீரென ஹென்றிக்ஸ் இராஜினாமா செய்தார்.

அடுத்த மூன்று மாதங்களில் புதிய தலைவர் தெரிவுசெய்யப்படும் வரை பிரான்ஸ் தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் அஸ்ட்ரிட் கயார்ட் பதில் தலைவராக கடமையாற்றுவார் என ஒலிம்பிக் குழு தெரிவித்தது.

'இன்றைய தினம் வெற்றியாளர் யாரும் இல்லை' என ஒளடியா கெஸ்டீரா தெரிவித்தார்.

'எவ்வாறாயினும் நெறிமுறைகள் மற்றும் ஜனநாயகம் வெற்றி பெறும்' என அவர் கூறினார்.

கடந்த ஒரு வருடத்தில் பிரான்ஸ் விளையாட்டுத்துறையை பாதித்த எதிர்பாராத நிகழ்வுகளின் வரிசையில் ஹென்றிக்ஸின் இராஜினாமா இப்போது இடம்பெற்றுள்ளது.

ஹென்றிக்ஸ், பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் உதவித் தலைவராவார்.

பிரான்ஸில் கால்பந்தாட்டம், றக்பி, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ் ஆகிய விளையாட்டுத்துறை சம்மேளனங்கள் ஊழல்களில் சிக்கித் தவிக்கின்றன.

இதன் காரணமாக விளையாட்டுத்துறையில் அதி உயர் பதவிகளை வகித்த இருவர் இராஜினாமா செய்திருந்தனர்.

பிரான்ஸ் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக பதவிவகித்த 80 வயதைக் கடந்த நோயல் லே க்றேட், பாலியல் மற்றும் உளவியல் துன்புறுத்தல்கள் குற்றச்சாட்டை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் இராஜினாமா செய்திருந்தார்.

ஆடவர் றக்பி உலகக் கிண்ண போட்டியை வரவேற்பு நாடாக பிரான்ஸ் நடத்தவுள்ள நிலையில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் முன்னாள் றக்பி பயிற்றுநருமான பேர்னார்ட் லெப்போர்ட்டே, பிரான்ஸ் றக்பி சம்மேளனத் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் விலகிக்கொண்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச சிலம்பம் போட்டியில் 2 ஆம்...

2023-05-28 13:45:55
news-image

டோனி போன்ற தலைவரை மீண்டும் நாங்கள்...

2023-05-28 13:55:26
news-image

கில் அபார சதம், மோஹித் 5...

2023-05-27 06:06:16
news-image

பங்களாதேஷை இலகுவாக வீழ்த்தியது இலங்கை :...

2023-05-26 21:01:08
news-image

மொத்தமாக 325 புள்ளிகளை பெற்றுக்கொண்ட விமானப்படையின்...

2023-05-26 18:27:35
news-image

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மூஸ் ஆடைகள்

2023-05-26 15:50:27
news-image

உலக டெஸ்ட் சம்பியனுக்கு 48 கோடி...

2023-05-26 15:50:51
news-image

ஆப்கான் தொடரில் ஹசரங்க இடம்பெறமாட்டார் ?

2023-05-26 12:44:53
news-image

சவோனா 100 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2023-05-26 11:47:51
news-image

மதீச பாதுகாப்பான கரங்களில் உள்ளார் -டோனியை...

2023-05-26 11:11:06
news-image

மேற்கிந்திய வீரர் டெவோன் தோமஸ் ஐசிசியினால்...

2023-05-26 09:55:20
news-image

ஒலிம்பிக் விழாவுக்கு முன்னர் குழப்பத்தில் பிரான்ஸ்...

2023-05-25 21:40:27