அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

Published By: Nanthini

25 May, 2023 | 05:32 PM
image

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இ.தொ.கா. கட்சித் தலைமை காரியாலயமான சௌமியபவனில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று இன்று வியாழக்கிழமை (25) பிற்பகல் 2 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஒரு வார காலத்துக்கு நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த கண்காட்சியை இராஜலட்சுமி ஆறுமுகன் தொண்டமான் அம்மையார் மற்றும் கண்டியைச் சேர்ந்த இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் கலாநிதி எஸ்.ஆதிரா ஆகியோர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

அதனை தொடர்ந்து, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பும் கௌரவிப்பும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாணத்தின் ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ் மற்றும் திருமதி அனுஷியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர் பிலிப்குமார், பிரதம சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கா.மாரிமுத்து, நிர்வாகச் செயலாளரும் உப தலைவரும் சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநருமான எஸ்.ராஜமணி, போசகர் பி.சிவராஜா, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன், இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் தலைவர் சிவராமன், பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ், இ.தொ.காவின் உப தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், நாளை வெள்ளிக்கிழமை (26) சௌமியபவனிலும், இ.தொ.கா.வின் பிரதேச காரியாலயங்களிலும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

அதனையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை (29) அமரர் ஆறுமுகன் தொண்டமானை கௌரவிக்கும் முகமாக முத்திரை வெளியீடு இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் கொட்டகலையிலும் ஞாபகார்த்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08