கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

Published By: Ponmalar

25 May, 2023 | 05:28 PM
image

கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 'ஜப்பான்' எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி, அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கார்த்தி, அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் முன்னணி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களான எஸ். ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் 'ஜப்பான்' எனும் கார்த்தி யார்? என்பது குறித்த பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் கார்த்தி அவரது குரலில், ''ஜப்பான் ..மேட் இன் இந்தியா '' என அலட்சியமான குரலில் கூறுவது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த படம் தீபாவளி திருநாளன்று வெளியாகும் என்றும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்