'அயோத்தி' படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு நடிகர் சசிகுமார் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில், அவருடன் தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான நவீன் சந்திரா இணைந்திருக்கிறார்.
'காவல்துறை உங்கள் நண்பன்' எனும் படத்தை இயக்கிய ஆர் டி எம் எனப்படும் ரஞ்சித் மணிகண்டன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் சசிகுமார்- நவீன் சந்திரா என இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பொன்னியம்மன் ஆலயத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதன் போது இயக்குநரும், தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.
இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான கதிரேசன் தயாரிக்கிறார்.
இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஏனைய நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இயக்குநரும், நடிகருமான சசிகுமாரும், தெலுங்கு நடிகர் நவீன் சந்திராகவும் 'பிரம்மன்' எனும் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM