கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் 'பிம்பிளிக்கி பிலாப்பி' பட டீஸர்

Published By: Ponmalar

25 May, 2023 | 05:23 PM
image

புதுமுகங்கள் நடிப்பில்  உருவான 'பிம்பிளிக்கி பிலாப்பி' எனும் தமிழ் திரைப்படத்தின் டீஸர் கேன்ஸில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குநர் அண்டனி இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் 'பிம்பிளிக்கி பிலாப்பி'. இதில்  வெங்காராஜ், ராஜேந்திரன், நர்மதா, ஆன் சாமுவேல்,தியரி, கிருஷ்ணகாந்த், ஜீவா, குவாகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் இயக்குநர் அண்டனி வில்லனாக நடித்திருப்பதுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜோகன் சிவனேஷ் இசையமைக்க, ஹாரர் டார்க் கொமடி ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஏகே புரொடக்ஷன்ஸ்  மற்றும் ஜியாஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் தளபதி ஆர். ஆனந்தகுமார் மற்றும் ஜெசிலன் பாலன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 2,000 கோடி வரை பரிசாக வெல்லக் கூடிய லொத்தர் முறையை தழுவி கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த லொத்தர் சீட்டை தேடி செல்லும் கும்பல், ஒரு சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் திரைக்கதை” என்றார். 

'பிம்பிளிக்கி பிலாப்பி' படத்தின் டீஸர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, அங்கு வருகைத் தந்திருந்த பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள  படமாளிகைகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51
news-image

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிக்கும்...

2023-05-27 15:26:30
news-image

'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

2023-05-27 14:03:17
news-image

பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

2023-05-26 18:12:21
news-image

தீராக் காதல் - விமர்சனம்

2023-05-26 18:17:30
news-image

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்'...

2023-05-26 18:18:27
news-image

இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

2023-05-26 18:19:07
news-image

கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

2023-05-26 21:31:06
news-image

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிலம்பரசன்

2023-05-26 15:49:18
news-image

பாரதிராஜா நடிக்கும் 'மார்கழி திங்கள்' படபிடிப்பு...

2023-05-26 13:28:03
news-image

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி...

2023-05-25 17:28:45