ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Ponmalar

25 May, 2023 | 05:23 PM
image

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி தேஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்தின் பிரத்யேக காணொளியில் நடிகர் கார்த்தி தமிழில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'டைகர் நாகேஸ்வரராவ்'. இப்படத்தில் ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் என இரண்டு கதாநாயகிகள் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

ஆர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 1970களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்டூவர்ட் புரம் எனும் பகுதியில் வாழ்ந்த ஒரு கொள்ளையனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட்லுவுடன் வெளியான பிரத்யேக காணொளியில் டைகர் நாகேஸ்வரராவ் யார்? என்பதனை விவரிக்கிறார்கள். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்