ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளருக்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் சபையில் வாழ்த்து

Published By: Nanthini

25 May, 2023 | 05:25 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாரிய சவால்கள், நெருக்கடிகள் நிறைந்த சந்தர்ப்பங்களிலும் பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க என பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் வாழ்த்து தெரிவித்தனர்.

ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (25) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

இதன்போது பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில், 

எமது நீண்ட பாராளுமன்ற வரலாற்றில், வரலாறு தொடர்பிலும், சம்பிரதாயங்கள் தொடர்பிலும்  பாராளுமன்றம், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுகள், அரச நிறுவனங்கள் தொடர்பிலும் அத்துடன் மக்கள் தொடர்பிலும் செயற்படும்போது சபாநாயகருக்கு மேலதிகமாக செயற்படும் பாராளுமன்ற உயரதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை குறிப்பிட முடியும்.

இது சாதாரண அல்லது இலகுவான பதவியல்ல. சட்டத்துறையிலும் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் பெரும் அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளவராக அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவியை வகித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அது முறையாக நிறைவேற்றப்படுவதில்லை. அத்தகைய நிலையில், அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களின் வேண்டுகோளை நிவர்த்தி செய்வதற்காக பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு பாரிய பொறுப்புகள் காணப்படும்.

பாராளுமன்றத்தில் பல சவால்களை எதிர்கொள்ள நேரும். சில சந்தர்ப்பங்களில் பொலிஸாரை கடமைக்கு அழைப்பதற்கான நிலைமைகள் ஏற்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தை  பாதுகாப்பதிலும் சபையை முன்னெடுத்துச் செல்வதற்கும் பெரும் அர்ப்பணிப்புடன் அவர் செயற்பட்டார் என்றார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கையில்,

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க பாராளுமன்றத்தில் உதவி செயலாளர் பதவியில் இருந்து பிரதம செயலாளர் வரை சுமார் 29 வருட காலம் சேவையாற்றியவர். அதனால் இந்த பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்பில் பாரிய அனுபவம் அவருக்கு இருக்கும்.

எனவே, அவரின் அனுபவம் மற்றவர்களுக்கும் பிரயோசனமாக இருக்கவேணடும். அதனால் அவரின் அனுபவங்கள் அவர் எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில் புத்தகம் எழுதவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசியல், விஞ்ஞாபனம் தொடர்பில் கேள்வி கேட்கும் மாணவர்களுக்கும் அது பிரயோசனமாக இருக்கும் என்றார்.

இந்த பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கான பாராட்டு பிரேரணையில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33