வடக்கில் 37 கிராம சேவகர் பிரிவுகளை ஒன்றிணைத்து மகாவலி "ஜே" வலயமாக அறிவிக்க தீர்மானம் - தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு

Published By: Digital Desk 5

25 May, 2023 | 05:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாணத்தில் உள்ள 37 கிராம சேவகர் பிரிவுகளை ஒன்றிணைத்து மகாவலி ஜே வலயமாக வர்த்தமானியில் வெளியிட மகாவலி அதிகார சபை தீர்மானித்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. சிங்கள குடி பரம்பலை விரிவுப்படுத்தும். 

1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீள்பரிசீலனை செய்யப்படும் என குறிப்பிடும் ஜனாதிபதி மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.

இராணுவம்,மகாவலி அதிகார சபை உட்பட அரச திணைக்களங்கள் தமிழர்களுக்கு எதிராகவே செயற்படுகிறது என தமிழ்  தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற நிதி ஒழுங்குப்படுத்தல் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 2007 ஆம் ஆண்டு மகாவலி அதிகார சபையின் எல் வலயத்தில் தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக  தென்னிலங்கை சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மகாவலி அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்படும் சிங்கள குடியமர்வு செயற்பாடுகளை பாராளுமன்றத்தின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

மகாவலி எல் வலயம் மீள்  வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட வேண்டும்,மகாவலி அதிகார சபை காணிகள் பிரதேச சபைக்கு பொறுப்பாக்கப்பட வேண்டும் என்பதை  ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்ட வர்த்தமானிகளை மீள் பரிசீலனை செய்யுமாறு  ஜனாதிபதி உரிய அமைச்சுகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஆனால் தற்போது  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகளை புதிதாக வர்த்தமானியில் வெளியிட மகாவலி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.சிங்கள பரம்பரை விரிவுப்படுத்தும் செயற்பாடுகளில் மகாவலி அதிகார சபை முன்னெடுக்கிறது.இவற்றை மகாவலி அதிகார சபை கைவிட வேண்டும்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அம்பாள் புரம்,கரும்புள்ளியான், கொள்ளிவிலாங்குளம், கொம்புமுறிப்பு,நெட்டாங்கண்டல்,ஒட்டறுத்தகுளம்,பாலிநகர்,பாண்டியன்குளம்,பொன்னகர்,பூவரசம் குளம், செல்வபுரம், சிராட்டிக்குளம், சிவபுரம், வன்னிவிலாங்குளம், விநாயகபுரம், ஆகிய 15 கிராம  அலுவலர் பிரிவுகளையும், அதேபோல் அனிச்சங்குளம், பாரதிநகர், புகழேந்திநகர், திருநகர், யோகபுரம் மத்தி,யோகபுரம் கிழக்கு ஆகிய 07  கிராம அலுவலர் பிரிவுகளையும், மாந்தை மேற்கில் உள்ள பாலியாறு, அந்தோணியார்புரம், ஆத்திமோட்டை, இலுப்பக்கடவை, கள்ளியடி, கூறாய், கோயிற்குளம், காயாநகர்,பெரியமடு ஈஸ்ட்,பெரியமடு வெஸ்ட்,பல்லமடு,வெடுத்தல்மடு ஈஸ்ட், நோர்த், உள்ளடங்களாக 15 கிராம சேகவர் பிரிவுகளையும் இணைத்து  37 கிராம அலுவலர் பிரிவுகளையும் ஒன்றிணைந்து மகாவலி ஜே வலயமாக வர்த்தமானியில் வெளியிட மகாவலி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலங்கள் உரிய தரப்பினருக்கு கையளிக்கப்படும் என குறிப்பிடும் ஜனாதிபதி மகாவலி அதிகார சபையின் இந்த செயற்பாட்டை ஏன் கவனிக்கவில்லை.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் என சர்வதேசத்திடம் குறிப்பிட்டு விட்டு மகாவலி அதிகார சபை ஊடாக காணிகளை தொடர்ந்து கையகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் சகல பகுதிகளிலும் குடி கொண்டுள்ளார்கள். இராணுவ முகாம்களில் புத்தர் நிலை வைக்கப்படுகிறது,விகாரைகள் கட்டப்படுகிறது. தமிழர் பகுதியில் பௌத்த மயமாக்கல் தற்போது இராணுவ மயமாக்கபபட்டுள்ளது .இந்த நாட்டில் பல்லின சமூகத்தின் உரிமைகள் பெயரளவில் மாத்திரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களும் எமது விடயத்தில் பார்வையற்றவர்களாக உள்ளார்கள்.

இராணுவமயமாக்கல் ஊடாக பௌத்த மயமாக்கலையும்,மகாவலி அதிகார சபை ஊடாக சிங்கள பரம்பலை விரிவுப்படுத்தும் செயற்பாட்டையும் அரசாங்கம் உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20
news-image

அரசியல் கைதிகள் விடுதலை - 18000கையெழுத்துக்களுடன்...

2025-02-18 11:59:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:57:34
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04