பத்திரணவை பந்துவீசவைக்க தோனி கடைப்பிடித்த தந்திரோபாயம் இது தான் !

Published By: Digital Desk 5

25 May, 2023 | 02:37 PM
image

(நெவில் அன்தனி)

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் ஐபிஎல் போட்டியில் மதீஷ பத்திரணவை பந்துவீசவைக்க அணித் தலைவர் எம்.எஸ். தோனி தந்திரோபாயம் ஒன்றைக் கடைப்பிடித்தார்.

அப் போட்டியில் 16ஆவது ஓவரை பத்திரணவை வீசவைப்பதற்காக தோனி தந்திரோபாயமாக வேண்டுமென்றே நேரத்தை விணடித்தாரா என்ற கேள்வி அப்போது எழுந்தது.

குஜராத்திற்கு எதிரான அப் போட்டியில் 12ஆவது ஒவரை வீசிய டெத் ஓவர் விற்பன்னர் பத்திரண அதன் பின்னர் 8 நிமிடங்கள் களத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

பின்னர் 16ஆவது ஓவரை வீசுவதற்கு பத்திரணவை தோனி அழைத்தார். ஆனால், அப்போது குறுக்கிட்ட கள மத்தியஸ்தர் அனில் சௌதரி, பத்திரணவுக்கு உடனடியாக பந்துவீச முடியாது என தோனியிடம் கூறினார்.

போட்டி விதிகளின் பிரகாரம் ஒரு வீரர் களத்திலிருந்து எத்தனை நிமிடங்கள் வெளியே இருக்கிறாரோ அவர் களத்திற்குள் வந்ததும் அதே அளவு நேரம் களத்தடுப்பில் ஈடுபட்ட பின்னரே பந்துவீச முடியும்.  

களத்திற்கு திரும்பிய பத்திரண பந்துவீசுவதற்கு இன்னும் 4 நிமிடங்கள் செலவிடவேண்டும் என தோனியிடம் சௌதரி சுட்டிக்காட்டினார்.

அப்படியெனில் யாரை பந்தவீச அழைப்பது என்ற குழப்பத்தில் தோனி இருந்தார். ஏனேனில் பிரதான பந்துவீச்சாளர்கள் மூவர் (ரவிந்த்ர ஜடேஜா, மஹீஷ் தீக்ஷன, தீப்பக் சஹார்) தங்களது 4 ஓவர்களை நிறைவு செய்திருந்தனர்.

துஷார் தேஷ்பாண்டேவுக்கு 2 ஓவர்களும் பத்திரணவுக்கு 3 ஓவர்களும் மீதம் இருந்தன. அதேவேளை, மொயீன் அலியை பந்துவீச்சில் ஈடுபடுத்த தோனி விரும்பவில்லை.

இந் நிலையில் மற்றைய மத்தியஸ்தர் கிறிஸ் கஃபானியுடன் வலிய கலந்துரையாடலில் ஈடுபட்ட தோனி நேரத்தைக் கடத்துவதற்காக தந்திரோபாயமாக செயற்பட்டார்.

இவ்வாறாக தோனி பேசிப் பேசியே நேரத்தைக் கடத்த, குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்கள் நிறைவு செயப்படாவிட்டால் அபாரதத்தை எதிர்கொள்ள நேரிடும் என தோனியை மத்தியஸ்தர்கள் எச்சரித்தனர்.

அது மட்டுமல்லாமல் கடைசி ஓவரின்போது 30 யார் வட்டத்திற்கு வெளியே 4 வீரர்களை மாத்திரமே களத்தடுப்பில் ஈடுபடுத்த முடியும் என்ற செய்தியையும் தோனியிடம் அவர்கள் கூறினார்.

தோனியோ எதற்கும் மசியவில்லை. மாறாக தனது 'துரும்புச் சீட்டு' பத்திரணவை பந்துவீச வைக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்.

இறுதியில் 4 நிமிடங்கள் கடக்க, பத்திரணவை பந்துவீச மத்தியஸ்தர்கள் அனுமதித்தனர்.

16ஆவது ஒவரில் பத்திரண 13 ஓட்டங்களைக் கொடுத்தார். அடுத்த ஓவரில் தேஷ்பாண்டே 19 ஓட்டங்களைக் கொடுக்க, கடைசி 3 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 39 ஓட்டங்கள் தேவைப்பட்டன.

எனினும் பத்திரண வீசிய 18ஆவது ஓவரில் 4 ஓட்டங்கள் மட்டும் கொடுக்கப்பட்டதுடன் ஒரு ரன் அவுட் உட்பட 2 விக்கெட்கள் சரிந்தன.

தேஷ்பாண்டே வீசிய 19ஆவது ஓவரில் 8 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் ஒரு வீக்கெட் வீழ்த்தப்பட்டது.

கடைசி ஓவரில் குஜராத்தின் வெற்றிக்கு 27 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 4 வீரர்கள் மாத்திரமே 30 யார் வட்டத்துக்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சாமர்த்தியமாக பந்துவீசிய பத்திரண 11 ஒட்டங்களைக் கொடுத்ததுடன் கடைசிப் பந்தில் கடைசி விக்கெட்டைக் கைப்பற்றி தோனியின் நம்பிக்கையைக் காப்பாற்றினார்.

தோனியின் இந்த செயலுக்கு கிரிக்கெட் விதி 41.9 இன் கீழ் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதே தவறு மீண்டும் நிகழ்ந்தால்  எதிரணிக்கு 5 ஓட்டங்கள் இனாமாக வழங்கப்படும். களம் விட்டு வெளியே சென்று விட்டு திரும்பிய பந்துவீச்சாளரும் இடைநிறுத்தப்படுவார். ஆனால் இவை எதுவும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

மத்தியஸ்தர்களின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பு என்பதால் தோனி தப்பித்துக்கொண்ட து அதிசயம்தான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும்...

2023-05-31 17:32:53
news-image

நான் அன்றிரவு உறங்கவில்லை - இறுதி...

2023-05-31 15:26:14
news-image

ஜோகோவிச்சுக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு...

2023-05-31 15:06:31
news-image

கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வத்தளை லைசியம்...

2023-05-31 09:59:37
news-image

ஆசிய கிண்ண கிரிக்கெட் இழுபறி தொடர்கிறது...

2023-05-31 09:39:26
news-image

ஆப்கானிஸ்தானுடனான ஒரு நாள் தொடர்: இலங்கை...

2023-05-30 22:11:44
news-image

மலேஷிய மாஸ்டர்ஸ் பெட்மின்டன் போட்டியில் இந்தியாவின்...

2023-05-30 16:37:29
news-image

உடல் ஒத்துழைத்தால் 2024 ஐ.பி.எல். தொடரில்...

2023-05-30 13:03:57
news-image

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் புதிய பொதுச்...

2023-05-30 13:03:32
news-image

கண்ணுக்கு விருந்து - சாய் சுதர்சனின்...

2023-05-30 11:52:31
news-image

ஓட்டப் போட்டியில் பங்கேற்காமல் இருக்கப்போவதாக யுப்புன்...

2023-05-30 12:29:26
news-image

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: மத்தியஸ்தர்...

2023-05-30 12:02:42