தகிக்கும் வெப்பத்தின் பிடியில் ஆசியா - அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் ஆபத்து

Published By: Rajeeban

25 May, 2023 | 12:37 PM
image

தென்னாசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் வெப்பநிலை மிகவும் ஆபத்தான விதத்தில் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.

அடுத்தஐந்து வருடங்களில் வெப்பநிலை பலமடங்காக அதிகரிக்கும் என்ற ஐநா தனதுஅறிக்கையில் எச்சரித்துள்ள நிலையிலேயே ஆசியா குறித்த எச்சரிக்கைகளும் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாக்கிஸ்தானின் வெப்பநிலை 50 செல்சியசாக காணப்பட்டது.ஜக்கோபாபாத்தில் 49 செல்சியசாக காணப்பட்டது.

வடஇந்தியாவின் பெரும் பகுதிகளும் தற்போது கடும் வெயிலில் சிக்குண்டுள்ளன.

ஆசியாவில்பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமான பரவலான வெப்பநிலை காணப்படுகின்றது.

சீனா தாய்லாந்து மியன்மார் பங்களாதேஸ் உட்பட பல நாடுகளில் வெப்பநிலை பல மடங்காக அதிகரித்துள்து.

வழமையாக இந்த காலப்பகுதியில் வெப்பம் அதிகம் என்கின்றபோதிலும் கடந்த எட்டுவாரங்களில் வழமைக்கு மாறான நிலை காணப்படுகின்றது என காலநிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் காரணமாக இ;வ்வாறான சூழ்நிலையை தொடர்ந்து எதிர்கொள்ளவேண்டியுள்ளது என காலநிலை விஞ்ஞானி நந்தினி ரமேஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இ;ந்த வருடம் மக்கள் அதிகளவு வெப்பத்தை எதிர்கொள்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

எனினும் துரதிஸ்டவசமாக இயல்பாகவே வெப்பநிலை அதிகமாக காணப்படும் இந்தமாதங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றங்கள் காரணமாக இவ்வாறான வெப்பநிலையை மேலும் எதிர்பார்க்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய பிராந்தியத்தில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக கடும் வெப்பத்தை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

கடந்தவருடம் இந்தியா பாக்கிஸ்தானில் மார்ச்மாதம்  வெப்பநிலை பலமடங்காக அதிகரித்திருந்தது,ஏப்பிரலிலும் இது நீடித்தது,சுமார் 90 பேர் உயிரிழந்தனர்.

எனினும் இவ்வாறான நிலை தொடர்வது எச்சரிக்கை மணியை அடிக்கின்றது என்கின்றார் ரமேஸ் 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏதாவது ஒரு வருடத்தில் மிக அதிகஅளவு வெப்பநிலை பதிவாகும் ஆபத்துள்ளதாக  உலகவானிலை  அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41