3.3 ஓவர்கள் பந்து வீசி ஐந்து ஓட்டங்களை கொடுத்து ஐந்து விக்கெட்கள் - லக்னோவின் கனவை கலைத்த ஆகாஸ் யார்?

Published By: Rajeeban

25 May, 2023 | 10:59 AM
image

மே 12- 2023 -உத்தரகாண்டின் முன்னர் ஒருபோதும் அறியப்படாத வேகப்பந்து வீச்சாளரான ( டெனிஸ்போல் மைதான பந்துவீச்சாளர்) ஆகாஸ் மத்வால் ஒரு தலைமுறை வீரர் என வர்ணிக்கப்படும் சுப்மன் கில்லிற்கு பந்து வீசினார்- கில்லின் துடுப்பை தாண்டிச்சென்ற அந்த பந்து விக்கெட்டை தகர்த்தது.

இது ஜஸ்மன்ட்பும்ரா எதிர் விராட்கோலியில்லை.

மாறாக இது மும்பாயிலிருந்து தவிர்க்க முடியாத இன்னுமொரு வரவை அறிவித்தது.

பும்ரா, ஜெவ்ரா ஆர்ச்சர் இல்லாதநிலையில்  எதிரணியின் விக்கெட்களை வீழ்த்துவதற்கு மும்பாய் அணி பயன்படுத்தும் வேகப்பந்துவீச்சாளராக மத்வால் மாற்றமடைந்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற லக்னோவி;றகு எதிரான  எலிமினேட்டரில்  மும்பாய் அணியின் பிரதான ஆயுதமாக அவர் விளங்கினார்.

அந்த போட்டியில் அவர் 3.3 ஓவர்கள் பந்துவீசி ஐந்து ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.

ரி20 போட்டிகளில் அவருக்கு சாதகமான பல விடயங்கள் உள்ளன  அவரது பந்து வீச்சு பாணி காரணமாக அவரால் பந்தை ஸ்கிட் செய்ய ஜிப் செய்ய முடிகின்றது,மேலும் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்ப்பது போல பந்து உயர்ந்துவருவதும் இல்லை.

மேலும் யோர்க்கர்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வீசுகின்றார் உத்தரகாண்டில் டெனிஸ்போலில் பந்துவீசிய நாட்களில் அவர் இந்த திறமையை வளர்த்துக்கொண்டார்.

புதன்கிழமை இரவு மத்வால் தனது திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தினார்,ஸ்கிட்பண்ணி குறைந்த உயரத்தில் வந்த பந்தினால் அயூஸ் படானி ஆட்டமிழந்தார்,ரவிபிஸ்னோயும் அவ்வாறே ஆட்டமிழந்தார்.மொஹ்சின் கான் சிறந்த யோர்க்கருக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால் அவர் பவர்பிளேயில் வீழ்த்திய பிரெராக் மன்காட்டினதும் பத்தாவது ஓவரில் வீழ்த்திய நிக்கொலஸ் பூரனிதும் விக்கெட்களே சிறப்பானவை.

ரோகிட்சர்மா ஹிரித்தீக் சொகீனை டீப்பொயின்டிலிருந்து டீப்தேர்ட்மானிற்கு மாற்றிய பின்னர் மத்வால் மன்காட்டின் விக்கெட்டிற்கு வெளியே பந்தை வீசினார் அதனை அடித்த மன்காட் டீப் தேர்ட்மானில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

மத்வால் தனது ஏழாவது ஐபிஎல் போட்டியிலேயே விளையாடுகின்றார் ஆனால் மிகவும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் அணித்தலைவரின்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினார்,ரோகித்திற்கும் மும்பாய்க்கும் அவ்வாறான வீரர்களை மிகவும் பிடிக்கும்.

பூரான் ஆட்டமிழந்த விதம் அதனை விட சிறப்பானதாக காணப்பட்டது, அரவுன்ட் த விக்கெட் வீசிய மத்வால் பூரானை பந்தை தவறாக கணிக்க செய்தார்  பூரன் விக்கெட் காப்பாளரிடம்  பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் லக்னோவினால் மீண்டெழ முடியவில்லை.

மத்வால் 2022 ஐபிஎல்லில் மும்பாய் அணியின் வலைப்பந்துவீச்சாளராக ஆடத்தொடங்கினார் சூரியகுமார் யாதவ் காயமடைந்த பின்னரே அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.

கடந்த முறை அவருக்கு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை இந்ததடவையும் ஆரம்பத்தில் அந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.எனினும் முகாலியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய பின்னர் மும்பாய் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.

அவர் இதுவரை வீசிய 129 பந்துகளில் 75 பந்துகளை பவர்பிளே ஓவர்களிலேயே வீசியுள்ளார் - ரோகித் இவரை அவ்வளவு தூரம் நம்புகின்றார்.

அவர் கடந்த வருடம் அணியின் உதவிபந்துவீச்சாளராக விளங்கினார்,நாங்கள் அவரை அணிக்குள் கொண்டுவந்தோம் ஆனால் அவர் போட்டிகளில் விளையாடவில்லை ஜொவ்ரா காயமடைந்ததும் இறுதி ஓவர்களில் பந்து வீசுவதற்கு எவராவது தேவை என்ற நிலையேற்பட்டது,அவரை ஏற்கனவே உன்னிப்பாக அவதானித்தவன் என்ற அடிப்படையில் அவர் மீது எனக்கு அதிக நம்பிக்கையிருந்தது  அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன நல்ல அணுகுமுறை உள்ளது எனரோகித் தெரிவித்திருந்தார்.

மும்பாயின் வெற்றியை தொடர்ந்து வாணவேடிக்கைகளிற்கு மத்தியில் ரோகித்சர்மா மத்வாலின் தலையில் தட்டி கட்டியணைப்பதுடன் சென்னை எலிமினேட்டர் முடிவிற்கு வந்தது.

யோர்க்கர் பந்துகளே எனது பலம் என்பது ரோகித்சர்மாவிற்கு தெரியும் எனினும் வலைப்பந்துவீச்சின் போது புதுப்பந்தையும் என்னால் சிறப்பாக பயன்படுத்த முடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார் என போட்டியின் பின்னர் மத்வால் தெரிவித்தார்.

இதன்காரணமாக சூழ்நிலைகளிற்கு ஏற்ப என்னை எப்படி பயன்படுத்துவது என்பது அவருக்கு தெரிந்திருந்தது என மத்வால் தெரிவித்திருந்தார்.

மத்வால் முழுநேர கிரிக்கெட் வீரராக மாறுவதற்காக பொறியியல்துறையை கைவிட்டவர்.

வெள்ளிக்கிழமை அஹமதாபாத்தில் கில்லின் விக்கெட்டை  மும்பாயை ஆறாவது ஐபிஎல்  கிண்ணத்தை நோக்கி  இட்டுச்செல்வதற்கான வாய்ப்பு மத்வாலிற்கு கிடைத்துள்ளது.

cricinfo

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரொஹான் டி சில்வா போட்டியின்றி மீண்டும்...

2023-05-31 17:32:53
news-image

நான் அன்றிரவு உறங்கவில்லை - இறுதி...

2023-05-31 15:26:14
news-image

ஜோகோவிச்சுக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு...

2023-05-31 15:06:31
news-image

கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வத்தளை லைசியம்...

2023-05-31 09:59:37
news-image

ஆசிய கிண்ண கிரிக்கெட் இழுபறி தொடர்கிறது...

2023-05-31 09:39:26
news-image

ஆப்கானிஸ்தானுடனான ஒரு நாள் தொடர்: இலங்கை...

2023-05-30 22:11:44
news-image

மலேஷிய மாஸ்டர்ஸ் பெட்மின்டன் போட்டியில் இந்தியாவின்...

2023-05-30 16:37:29
news-image

உடல் ஒத்துழைத்தால் 2024 ஐ.பி.எல். தொடரில்...

2023-05-30 13:03:57
news-image

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தின் புதிய பொதுச்...

2023-05-30 13:03:32
news-image

கண்ணுக்கு விருந்து - சாய் சுதர்சனின்...

2023-05-30 11:52:31
news-image

ஓட்டப் போட்டியில் பங்கேற்காமல் இருக்கப்போவதாக யுப்புன்...

2023-05-30 12:29:26
news-image

டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: மத்தியஸ்தர்...

2023-05-30 12:02:42