ஈவா அனுசரணையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாடசாலை மாணவியர் 100,000 பேருக்கு சுகாதார அணையாடைகள் நன்கொடை

Published By: Digital Desk 5

25 May, 2023 | 10:11 AM
image

1987 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் முன்னணி சுகாதார அணையாடை (சானிட்டரி நாப்கின்) வர்த்தகநாமமாகத் திகழ்ந்து வருகின்ற ஈவா, இலங்கை முழுவதிலும் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய பாடசாலை மாணவிகள் 100,000  பேருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் சுகாதார அணையாடை நன்கொடை முயற்சியைத் தொடங்கியுள்ளது.

மகளிர் தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த முயற்சி, பாடசாலை மாணவிகளின் மாதவிடாய்க் கால வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், மாதவிடாய் சார்ந்த சுகாதாரப் பொருட்கள் கிடைக்காததால் எந்தவொரு மாணவியும் பாடசாலைக்குச் செல்வதைத் தவறவிடாமல் இருக்கவும் ஈவா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாகும்.

கொழும்பில் உள்ள இதற்குத் தக்க இரண்டு பாடசாலைகளுக்கு ஈவாவின் Dream Sanitary  சுகாதார அணையாடைகளின் முதல் தொகுதி நன்கொடை வழங்கப்பட்டது.

சுகாதார அணையாடை நன்கொடை முயற்சியானது, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன், கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவிகள் தங்களுடைய கல்வியைத் தடையின்றி மற்றும் பாடசாலை செல்லும் நாட்களை இழக்காமல் தொடர உதவி தேவைப்படுகின்ற பாடசாலைகளை உள்ளடக்கும்.

இளம் பாடசாலை மாணவியொருவர் மாதவிடாய் காரணமாக பாடசாலைக்குச் செல்வதைத் தவற விடுகின்ற ஒவ்வொரு முறையும், அவர்கள் தங்கள் கனவுகளை அடைவதில் ஒரு படி பின் தங்கி விடுகின்றனர்.

EVA Dreams Sanitary Pad பாக்கெட்டுக்களை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் சமூகங்கள் மற்றும் குறைந்த செலவில் இது தொடர்பான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை நாடுகின்ற பாடசாலை மாணவிகளுக்கு வழங்குவதன் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஈவா உறுதியூண்டுள்ளது. ஈவா சுகாதார அணையாடைகள் அவர்களின் மாதவிடாய் கல்விக்கு இடையூறு கிடையாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழும பணிப்பாளரான சாந்தி பகீரதன் அவர்கள், தனது மற்றும் கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் கீழ் உள்ள ICL Brands நிறுவனத்தின் ஆதரவை வெளிப்படுத்தினார். அவர் இந்த முயற்சி தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

“ஒவ்வொரு பாடசாலை மாணவியும் தரமான மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளைப் பெற்றுக்கொள்ளும் வழிவகைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன், எவ்விதத்திலும் பாடசாலைக்கு செல்வதை ஒருபோதும் தவற விட்டுவிடக்கூடாது.

எந்த ஒரு மாணவியும் கைவிட்டுவிடப்படக்கூடாது என்பதில் ஈவா உறுதி பூண்டுள்ளதுடன், இது போன்ற நன்கொடை முயற்சிகள் ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பம் மாத்திரமே. இலங்கையில் மாதவிடாய் சார்ந்த வறுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு எம்மாலான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம் என்பதில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், பாடசாலை செல்லும் இளம் பெண் பிள்ளைகளுக்கான எங்கள் முயற்சிகள், கல்விக்கு சமமான வாய்ப்பைப் பெறுவதற்கும், அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கும் ஊக்கமளிக்கும்,” என்று குறிப்பிடடார். 

கடந்த 35 ஆண்டுகளாக, வலுவூட்டப்பட்ட ஈவா நுகர்வோரின் விசுவாசமான ஆதரவு, மாதவிடாய் வறுமையை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் நிவர்த்தி செய்யும் இத்தகைய நன்கொடை முயற்சிகளை வர்த்தகநாமம் வெற்றிகரமாக முன்னெடுக்க வழிவகுத்தது.

இலங்கைப் பெண்களை ஈவா சுகாதார அணையாடைகளை வாங்குமாறு நிறுவனம் வலியுறுத்துவதுடன், இதன் மூலமாக இத்தகைய நன்கொடைகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு, சமூகங்களிலும் சமுதாயத்திலும் பாரிய நல்விளைவுகளை ஏற்படுத்த வழிகோலும்.

தமது எதிர்காலம் தொடர்பான அபிலாஷைகளைக் கொண்டுள்ள மாணவிகள், வளர்ந்தவுடன் தங்கள் சமூகம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒரு பாரிய இலக்கை நோக்கி பங்களிக்க அர்ப்பணிப்புடன் இருக்கும் வகையில் வலுவூட்டப்படுகிறார்கள்.

இலங்கையின் பெற்றோர்கள் மற்றும் பெண்களை வர்த்தகநாமத்தின் முயற்சிகளில் இணைந்து கொள்ளுமாறும், ஈவா பாக்கெட்டை வாங்குவதன் மூலம், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பின்னணியில் உள்ள ஒரு பாடசாலை மாணவிக்காவது ஆதரவளிக்குமாறும் ஈவா அழைப்பு விடுகின்றது. சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால், நாடு முழுவதும் உள்ள பல பாடசாலை மாணவிகள் தங்கள் கனவுகளை நனவாக்குவார்கள் என்று ஈவா நம்புகிறது.

ஈவா 1987 இல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளில் சந்தையில் முன்னிலை வகித்து வருவதுடன், நாடு முழுவதும் உள்ள வலிமையான மற்றும் நம்பிக்கையான பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனது தயாரிப்புகளை மேம்படுத்த தொடர்ந்து அயராது உழைத்து வருகிறது.

சிறந்த உறிஞ்சும் பண்பு, சௌகரியம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் மிக உயர்ந்த தரம் கொண்ட சுகாதார அணையாடைகளை வழங்குவதற்கு ஈவா உறுதிபூண்டுள்ளது. பெண்கள் நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் ஒரு வர்த்தகநாமமாக, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு சிறந்த மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளை வழங்குவதற்காக, தனது தயாரிப்புகளை மேம்படுத்துவதில் ஈவா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச அடிச்சுவட்டை விஸ்தரித்துள்ள 99x நிறுவனம்...

2024-06-20 17:30:20
news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03