DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ் தனது மருத்துவச் செயற்பாடுகளை தொடருகின்ற DIMO

Published By: Digital Desk 5

25 May, 2023 | 09:56 AM
image

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, மருந்துகள் துறையில் அதன் சமீபத்திய விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம், DIMO Healthcare எனும் புதிய அடையாளத்தின் கீழ் அதன் சுகாதார துறைசார்ந்த செயல்பாடுகளையும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தியுள்ளது.

Radiology, ophthalmology, neurology, cardiology, oncology ஆகிய துறைகளில் கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக அதிநவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதன் மூலம் நாட்டின் சுகாதாரத் துறையில் DIMO முன்னணியில் உள்ளது.

நாட்டின் சுகாதாரப் பாதுகாப்புத் துறைக்கு அதிக மதிப்பைச் சேர்த்துள்ளது. இந்த சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், DIMO சமீபத்தில் மருந்துத் தயாரிப்புகளிலும் அது விரிவாக்கத்தை மேற்கொண்டுள்ளது. 

நிறுவனம் தனது மூலோபாய தொலைநோக்குப் பார்வையுடன், Mansel Ceylon (Private) Limited மற்றும் Associated Laboratories (Private) Limited ஆகிய நிறுவனங்களை சமீபத்தில் கையகப்படுத்தியதன் மூலம் மருந்துத் துறையில் விரிவாக்ககத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த சமீபத்திய கையகப்படுத்தலின் மூலம், Pain Management, Respiratory Disorders, Gastroenterology, Liver Diseases, Antibiotics, Endocrinology, Cardiovascular Antihistamine, Vitamins, Supplements, Neurology, Dermatology, Psychiatric treatment போன்றவற்றிற்கான சிகிச்சைகளுக்கு மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து 250 இற்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்புகளை வழங்குவதற்கு DIMO Healthcare உதவுகிறது.

சைப்ரஸின் Medochemie Ltd, அமெரிக்காவின் Grifols Inc, இந்தியாவின் Hetero Ltd, இந்தோனேஷியாவின் PT. Harsen, மலேசியாவின் Hovid Bhd, இந்தியாவின் Geno Pharmaceuticals Ltd, பாகிஸ்தானின் Tabros Pharma (Pvt) Ltd போன்ற பிரபல மருந்து உற்பத்தி நிறுவனங்களிலிருந்து இம்மருந்துகள் பெறப்படுகின்றன.

DIMO Healthcare மருந்துப் பிரிவானது, மருந்துகளை எளிதாக அணுகும் வகையில், நாடளாவிய விநியோக வலையமைப்பையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DIMO நிறுவனத்தின் தலைவரும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இவ்விரிவாக்கம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

“இந்த உறுதிமிக்க புதிய அடையாளமான DIMO Healthcare இன் கீழ், ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இலங்கையின் சுகாதாரத் துறையின் எல்லைகளை விரிவுபடுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

எமது மூலோபாய தூர நோக்கானது, சுகாதாரத் துறையின் பல கோணங்களை எளிதாக்குவதற்கான வாய்ப்புகளை எமக்கு வழங்கியுள்ளதோடு, ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எமது முயற்சிகளுக்கமைய, நாம் சேவை வழங்கும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதில் இது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என நாம் நம்புகிறோம்.

DIMO குழுமத்தின் சுகாதாரப் பிரிவைக் கண்காணிக்கும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல கருத்து வெளியிடுகையில்,

“DIMO Healthcare சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்தை உள்ளூர் சுகாதாரத் துறைக்கு வழங்குவதில் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

சுகாதாரத் துறையில் சிறந்த சேவையை வழங்குவதை நோக்காகக் கொண்டு, உலகப் புகழ்பெற்ற கூட்டாளர்களுடன் இணைவதற்காக நாம் எப்போதும் பணியாற்றி வருகிறோம்.

உலகப் புகழ்பெற்ற உற்பத்தியாளர்களான Siemens Healthineers, Carl Zeiss, Draeger உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளை நாட்டிற்கு வழங்குவதன் மூலம் கதிரியக்கவியல், கண் மருத்துவம், அபாயநிலை பராமரிப்பு, இருதயவியல், Radiology, ophthalmology, critical care, cardiology, oncology, urology, neonatal care போன்றவற்றிற்கான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் DIMO Healthcare முன்னணியில் திகழ்கின்றது. 

Boston Scientific, St. Jude, Sony, Codonics உள்ளிட்ட சர்வதேசப் புகழ்பெற்ற மிகப் பெரும் நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் சுகாதாரத் துறைக்கு மருத்துவ சாதனங்களை DIMO Healthcare வழங்குகின்றது.

இலங்கையில் PET scanners, MRI scanners, Operating Microscopes ஆகியவற்றின் மிகப்பெரிய வழங்குநராக DIMO Healthcare உள்ளது. DIMO Healthcare வழங்கும் MRI, CT, PET-CT ஸ்கேனர்கள் போன்ற கதிரியக்க கருவிகள் மூலம் வருடாந்தம் 525,643 நோயாளிகள் சேவை பெறுகின்றனர்.

அதே நேரத்தில் செயற்பாட்டு நுணுக்குக்காட்டிகள் மூலம் வருடாந்தம் 213,000 அறுவை சிகிச்சைகள் மற்றும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான நோயறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிறுவனம் இலங்கையின் முதலாவது Tomotherapy பிரிவை நாட்டிற்கு வழங்கியுள்ளது.

DIMO Healthcare, இந்த மருத்துவ உபகரணங்களின் தடையற்ற செயற்பாட்டின் பொருட்டு, அவ்வுபகரணங்களுக்கு வழங்கப்படும் சேவை அம்சமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்பதால், நிறுவனம் இணையற்ற விற்பனைக்குப் பின்னரான சேவையைக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈவா அனுசரணையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய...

2023-05-25 10:11:01
news-image

DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ்...

2023-05-25 09:56:13
news-image

நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்க...

2023-05-25 10:09:50
news-image

'People’s Remittance கோடி அதிர்ஷ்டம்’ ஆண்டிறுதி...

2023-05-24 14:55:31
news-image

விளம்பரத்துறையை புதுப்பிக்க 3R உத்தியை இயக்க...

2023-05-22 20:19:51
news-image

DSI அதன் AVI வர்த்தகநாமத்தின் மீறலுக்கு...

2023-05-22 13:33:00
news-image

AIA லங்காவின் பிரதம முகவர் நிறுவன...

2023-05-22 12:39:22
news-image

அமானா வங்கி 'LankaPay டெக்னோவேஷன் விருதுகள்...

2023-05-18 17:08:15
news-image

பிசினஸ் டுடேயின் சிறந்த 40 நிறுவனங்கள்...

2023-05-18 14:31:58
news-image

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையானது...

2023-05-16 20:57:13
news-image

கடன் தள்ளுபடி குறித்த செய்திக்கு மக்கள்...

2023-05-16 21:25:27
news-image

இலங்கையில் பாதுகாப்பான சுகாதார பழக்கத்தை மேம்படுத்தும்...

2023-05-10 14:08:04