அமெரிக்காவின் சிறப்புகளுடன் மேலும் பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம். என புதிய ஜனாதிபதியின் முத்தத்தோடு அடுத்த முதல் பெண்மணி  ஆகவுள்ள மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று சம்பிரதாயபூர்வமாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சியிற்கு முன்னர் டிரம்ப் நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மெலனியா டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவருக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு,  டிரம்பின் விடுதிகள் யாவும் அவரது பெயரிலே இருப்பதோடு அவற்றின் நிறைவேற்று பணிகளை டிரம்பின் முத்த மகன் மேற்கொள்வார். என அவர் தெரிவித்துள்ளார். 

டிரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சியை ஒட்டி வாஷிங்டன் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளதோடு, முன்கூட்டிய கொண்டாட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.