சொரியாடிக் ஒர்த்தரடிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Ponmalar

24 May, 2023 | 03:50 PM
image

உலகம் முழுவதும் 125 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் சொரியாசிஸ் எனும் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும், இவர்களில் 30 சதவீதத்தினருக்கு சொரியாடிக் ஒர்த்தரடிஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இந்நிலையில்  சரியான தருணத்தில் முறையான சிகிச்சையை பெறாவிட்டால், கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சொரியாடிக் ஒர்த்தரடிஸ் பாதிப்பிற்கு, தற்போது நவீன சிகிச்சைகள் அறிமுகமாகியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய உடலில் இயங்கி வரும் நோய் எதிர்ப்பு மண்டலம், தவறுதலாக ஆரோக்கியமான செல்களையும், திசுக்களையும் தாக்கும் போது... சொரியாடிக் ஒர்த்ரைடீஸ் எனும் பாதிப்பு உண்டாகிறது.

இத்தகைய பாதிப்பின் போது எம்முடைய நோயெதிர்ப்பு மண்டலம், உடலில் உள்ள மூட்டு பகுதியில் வீக்கம் மற்றும் வலியை உண்டாக்குகிறது. அத்துடன் அப்பகுதியில் உள்ள தோல் செல்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு அதிக அளவில் உற்பத்தி செய்து பாதிப்பை உண்டாக்குகிறது.

மரபணு காரணமாகவும், சுற்றுச்சூழல் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் சிலருக்கு உடலில் காயம் ஏற்பட்டிருந்தால் அந்த சூழலில் ஏதேனும் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று பாதிப்பு இணைந்தால், இத்தகைய சொரியாடிக் ஒர்த்தரடிஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை சரியான தருணத்தில் கண்டறிந்து பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு முறையான சிகிச்சையை பெறவில்லை என்றால், மூட்டுகளில் வலியை ஏற்படுத்தி செயல்படாமல் முடக்கிவிடும். மேலும் எம்முடைய மூட்டுகளில் உள்ள எலும்பின் வலிமையை குறைத்து, எலும்பின் ஆரோக்கியமான திசுக்களை அழித்து, நிரந்தர சிதைவை ஏற்படுத்தி விடும். மேலும் சிலருக்கு இதன் காரணமாக உயர் குருதி அழுத்த பாதிப்பு, நீரிழிவு, இதய பாதிப்பு போன்ற இணை நோய்களையும் உண்டாக்குவதற்கான சாத்தியக்கூறும் உண்டு.

மூட்டுகளில் வலி ஏற்பட்டாலோ அல்லது வீக்கம் ஏற்பட்டாலோ அல்லது உங்களுடைய கை விரல்கள், கால் விரல்களிலுள்ள மூட்டுகளின் செயல்திறன் மற்றும் இயங்கு திறன் பாதிக்கப்பட்டாலோ உடனடியாக மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் எக்ஸ்ரே மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து ரூமட்டாய்ட் பரிசோதனை மற்றும் மூட்டுகளில் உள்ள திரவ பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.

மருத்துவர்கள் இதன்போது DMARDs எனும் நவீன மருந்துகளை வழங்கியும், ஸ்டிராய்டு மருந்துகளை வழங்கியும் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதனைத் தொடர்ந்து பிசிக்கல் தெரபி மற்றும் ஒக்குபேஷனல் தெரபி போன்றவற்றை அளித்து வலியை குறைத்து நிவாரணத்தை அளிப்பர். மிக சிலருக்கு மட்டுமே மூட்டு மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.

டொக்டர் ராஜ் கண்ணா
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-27 14:02:39
news-image

வலிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2023-05-26 18:10:38
news-image

கணைய புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2023-05-26 12:25:04
news-image

சொரியாடிக் ஒர்த்தரடிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2023-05-24 15:50:08
news-image

தொடையின் பின்பகுதியில் ஏற்படும் வலிக்கான நிவாரண...

2023-05-23 11:07:06
news-image

கர்ப்பிணிகளுக்கான சுவாசிக்கும் டெக்னிக்ஸ்!

2023-05-20 19:53:27
news-image

சின்னம்மை (Chicken Pox)

2023-05-20 19:55:40
news-image

ஞாபகசக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

2023-05-20 13:59:49
news-image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 7...

2023-05-20 14:00:24
news-image

காது… மூக்கு… தொண்டை… பிரச்சினைகள்

2023-05-19 14:36:24
news-image

நடைப்பயிற்சி நல்லது!

2023-05-19 13:00:50
news-image

சிறுநீர் காட்டும் உடல் ஆரோக்கியம்!

2023-05-19 12:43:45