எம்மில் சிலருக்கு ஜாதகக் கட்டங்கள், அவருக்கு நடைபெறும் திசை, புத்தி ஆகியவை சாதகமாகயிருந்தாலும், அவரால் நினைத்த அளவிற்கு வாழ்வில் முன்னேற இயலாது. இதற்கான பரிகாரங்களை செய்தபிறகு அவருக்கான வளர்ச்சி என்பது வேகமாக இல்லாமல் தடைப்பட்டு தான் தாமதப்பட்டு தான் நடக்கும். இது ஏன்? என்றால் அவர்கள் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு சாபத்தை பெற்றவர்களாகயிருப்பர்.
சாபங்களா… அதனை யார் இப்போது விடுகிறார்கள்? என எம்மில் பலரும் கேட்பதுண்டு. நீங்கள் ஒரிடத்தில் பணியாற்றுகிறீர்கள். உங்களுக்கான நியாயமான உரிமைகளை, உங்களுடைய முதலாளி வழங்கவில்லை என்றால், மனதில்… ‘இவனுக்கெல்லாம் சுகவாழ்வு கிடைக்கிறது. எமக்கு கிடைக்கவில்லையே…’ என மனதில் ஆழமாக நினைத்தால் கூட அது கூட நீங்கள் விடுக்கும் சாபம் தான்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும், தீயவர்களைஅழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றவராகயிருந்தாலும், தாங்கள் பெற்ற வரத்தால் நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால் நல்லவர்களை கசக்கி பிழிந்தால், அதன் காரணமாக அவர்கள் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால்... எப்பேர்ப்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.
இதனிடையே சாபம் என்பது, ஆன்மீக பெரியோர்களல் 19 வகையினதானது என பட்டியிலிடப்பட்டிருக்கிறது. அதில் சிலவற்றினைத் தொடர்ந்து காண்போம்.
1. பெண் சாபம்
பெண்களை ஏமாற்றுவதாலும்… குறிப்பாக அப்பாவி பெண்களை ஏமாற்றுவதாலும், உடன் பிறந்த மற்றும் உடன்பிறவா மூத்த மற்றும் சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், ஆதரிக்க மறுப்பதாலும், ஆயுள் முழுவதும் பற்றிய கரத்தை விடாமல் காப்பாற்றுவேன் என உறுதிமொழி கொடுத்து, கைப்பற்றிய மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. இத்தகைய பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். அதாவது வம்சம் தழைக்காது.
2. பிரேத சாபம்
இயற்கையோ அல்லது அகாலமோ மரணமடைந்த மனிதனின் உடலை வைத்துக் கொண்டு, அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலுக்கு அவமரியாதை செய்வதும், சடலத்திற்கான இறுதி சடங்கு சம்பிரதாய காரியங்களை செய்ய விடாமல் தடுப்பதும், இறந்தவரை விவரிக்க இயலாத உறவினர்கள் மற்றும் வேண்டியவர்களை பார்த்து, இறுதி மரியாதை செய்ய அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3. பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக் கொடுத்த குருவை மறப்பதாலும், வித்தையை தவறாக பயன்படுத்துவதாலும், மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையின் சூட்சுமத்தை மறைப்பதாலும் பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால் வித்யா கஷ்டம் அதாவது படிப்பு இல்லாமல் போகும். அதிலும் சரியான தருணத்தில் நாம் கற்ற கல்வி பலனளிக்காமல் போகக்கூடும்.
4. சர்ப்ப சாபம்
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால் கால - சர்ப்ப தோஷம் ஏற்பட்டு, திருமணத் தடை ஏற்படும். பரிகாரம் செய்து, திருமணம் செய்து கொண்டாலும், சர்ப்பத்தால் ஏதேனும் தடைகளையும், தாமதங்களையும் எதிர்கொள்ளநேரிடும்.
5. பித்ரு சாபம்
முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதாலும், தாய், தந்தை, தாத்தா - பாட்டி போன்றோரை அரவணைத்து பாதுகாக்காமல், உதாசீனப்படுத்துவதாலும், அவர்களை ஒதுக்கி வைப்பதாலும், பித்ரு சாபம் உண்டாகிறது. பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறப்பதை தடுககும். அதையும் கடந்து ஆண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் பால்ய வயதிலேயே அகால மரணத்தை தழுவுவார்கள். இது போன்ற சாபத்தை பித்ரு சாபம் உண்டாக்கும்.
6. கோ சாபம்
பசுவை வதைப்பதாலும், பால் வற்றிய பசுவை வெட்டக் கொடுப்பதாலும், கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பதாலும், தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காமல் இருப்பதாலும்.. கோ சாபம் ஏற்படும். இதனால் குடும்பத்திலோ.. வம்சத்திலோ.. எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
7. பூமி சாபம்
யார் மீதோ எற்படும் ஆத்திரத்தால் பூமியைக் காலால் உதைப்பதாலும், தேவையில்லாமல் பாழ்படுத்துவதாலும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதாலும், அடுத்தவர் பூமியைப் பறித்துக் கொள்வதாலும்.. பூமி சாபம் ஏற்படும். இத்தகைய சாபத்தால் மற்றர்வகளுடன் பகிர்ந்து கொள்ள இயலாத நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்.
8. கங்கா சாபம்
பலர் அருந்தக் கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும் கங்கா சாபம் வரும். இத்தகைய சாபத்தைப் பெற்றவர்கள், குடியிருக்கும் பகுதியில் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
9. விருட்ச சாபம்
பச்சை மரத்தை வெட்டுவதாலும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப் போகச்செய்வதாலும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும் விருட்ச சாபத்தினால் கடன் மற்றும் நோய் உண்டாகும்.
10. தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையை பாதியில் நிறுத்துவதாலும், தெய்வங்களை இகழ்வதாலும், தெய்வங்களை நிந்தித்தாலும்..தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தினால் உறவினர்கள் பிரிந்து விடுவார்கள். அதிலும் உங்களுக்கு உதவும் எண்ணமுள்ள உறவினர்கள் இறுதிக்கட்டத்தில் பிரிந்துவிடுவர்.
11. ரிஷி சாபம்
இது கலியுகத்தில் ஆச்சாரிய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பதால் ரிஷி சாபம் ஏற்படும். இத்தகைய சாபத்தைப் பெற்றாலும், ரிஷிக்களின் வாக்கு பலித வலிமையான வம்சம் அழியும்.
12. முனி சாபம்
எல்லை தெய்வங்கள் மற்றும் சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜையையும் மறந்துவிட்டால், முனி சாபம் ஏற்படும். முனி காவல் தெய்வம் என்பதால், இத்தகைய சாபத்தைப் பெற்றவர்களுக்கு செய்வினைக் கோளாறுகள் உண்டாகும்.
13. குல தெய்வ சாபம்
மேற்கூறிய சாபங்களை விட வலிமையானது எமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை ஆண்டுதோறும் உரிய மரியாதை அளித்து வணங்காமல் புறகணிப்பதால் ஏற்படும் குல தெய்வ சாபம். இதன் காரணத்தினால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாது. ஒரு வித துக்கம் சூழ்ந்து கொள்ளும். உறவினர்கள், நண்பர்கள், செல்வ வளம் இருந்தும் அனாதையாகவும், ஆதரவற்றவராகவும் இருப்பதைப் போன்ற உணர்வு உண்டாகும்.
எனவே நீங்கள் அறிந்தும், அறியாமலும் மேற்கூறிய சாபத்தைப் பெற்றிருந்தால், அதனை அதற்குரிய பரிகாரத்தை.. உரிய ஜோதிடர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சாபமின்றி வாழ்ந்தால் நட்டமின்றி மகிழ்ச்சியாக வாழலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM