இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான மக்கள் வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘People's Remittance கோடி அதிர்ஷ்டம்’ மாபெரும் சீட்டிழுப்பின் முதல் பரிசு ரூபா 10 மில்லியனை வென்ற மாபெரும் வெற்றியாளர் சுரஞ்சன பெரேராவுக்கு பெருமையுடன் வழங்கியுள்ளது.
இச்சீட்டிழுப்பின் மாபெரும் பரிசளிப்பு நிகழ்வு கொழும்பு 2இல் உள்ள மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்) ரொஹான் பத்திரகே ஆகியோரால் சுரஞ்சன பெரேராவுக்கு மாபெரும் பரிசு வழங்கப்பட்டது.
இந்த வெகுமதியின் அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் உதவிப் பொது முகாமையாளர் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்) அருணி லியனகுணவர்தன, சந்தைப்படுத்தல் தலைவர் நாலக விஜயவர்தன மற்றும் சிரேஷ்ட முகாமையாளர் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்) திலினி பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
‘People's Remittance கோடி அதிர்ஷ்டம்’ சீட்டிழுப்பானது வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் சேவைகளில் பங்கேற்கும் வங்கியினது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த மாபெரும் பரிசை வழங்குவதன் மூலம் மக்கள் வங்கியானது தனது தலைசிறந்த வங்கிச்சேவை அனுபவங்களை வழங்குவதற்காக அதன் ஓயாத அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘People's Remittance கோடி அதிர்ஷ்டம்’ சீட்டிழுப்பு தற்போது மேலும் அதிக பரிசுகளுடன் 2023 டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈடு இணையற்ற வங்கிச்சேவைகளை வழங்குவதில் வங்கியின் அர்ப்பணிப்பு வெளிப்படுவதுடன், தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு வெகுமதி அளிக்கும் எண்ணத்தையும் ஊக்குவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM