குவைத்தில் வசிக்கும் இலங்கையர்களின் அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்ட புது வரு கொண்டாட்ட நிகழ்வுகள்

Published By: Digital Desk 5

24 May, 2023 | 02:24 PM
image

குவைத்தில் வசிக்கும் இலங்கையர்களின் அமைப்புக்கள் மற்றும் அந்நாட்டின் இலங்கை தூதரகம் ஆகியவற்றின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புது வரு கொண்டாட்ட நிகழ்வுகள் அந்நாட்டிலுள்ள இரண்டு மைதானங்களில் இடம்பெற்றிருந்தன.

மே மாதம் 12 ஆம் திகதி மரணசகாய நிதியம் மற்றும் சமூக சேவை சங்கம் ஆகியன இணைந்து குவைத்தில் 'பிலிப் அபாசியா " எனும் பிரதேசத்திலுள்ள கிரிக்கட் விளையாட்டு மைதானத்திலும்,  குவைத் - ஸ்ரீ இலங்கை கலாசார சங்கம் மே 19 ஆம் திகதி

"அபுஹலீஃபா ஷீல்" பிரதேசத்தில் உள்ள கிரிக்கட் மைதானத்திலும்  இந்த நிகழ்வுகளை நடத்தி இருந்தன.

குவைத் நாட்டின் அரசாங்க விடுமுறை தினங்களில் இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டதோடு  அந்த தினங்களில் அங்கு 47 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை  காணப்பட்ட நிலையிலும் அதனை பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கணக்கான இலங்கையர்கள்  கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் குவைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் இந்த இரு நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் .

குவைத் நாட்டில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்தினால் அந்நாட்டிலுள்ள இலங்கை மாணவர்களுக்கு அறநெறி வகுப்புக்கள் நடத்தப்படுவதோடு மாணவர்கள் பங்கு பற்றும்  இசை மற்றும் நடன குழுக்களும் காணப்படுகின்றன.

குவைத்தில் வசிக்கும் இலங்கையர்கள் அடங்கிய இசைக்குழுவும் அங்கு செயற்படுகின்றது.

நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் இலங்கையர் ஒருவரும் அந்நாட்டில் பணிபுரிந்து வருவதால், இந்த புத்தாண்டு நிகழ்வில் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்  போது நடத்தப்படும் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும், குவைத்தில் வசிக்கும் இலங்கை குடும்பங்களின் குழந்தைகளுக்கும் அந்த நாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கும் அவர்களின் இலங்கை வழக்கங்கள், சடங்குகள் மற்றும் ஹெலகாமி விளையாட்டுகள் பற்றி அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

 இந்த நிகழ்வுகளின் பின்னர், அந்த நாட்டில் வாழும் இலங்கையர்களைக் கொண்ட இசைக் குழுவுடன் இணைந்து இலங்கையைச் சேர்ந்த பாடகர் குழுவின் பங்கேற்புடன் இரண்டு இசைக் கச்சேரிகளும் நடத்த பட்டிருந்தன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35
news-image

சமூக சேவையாளர் செல்வராசா முரளீதரனுக்கு மெல்போர்ன்...

2023-05-27 12:13:28
news-image

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின் 'இலண்டனிலிருந்து...

2023-05-26 18:12:46
news-image

பன்வில பிரதேச மாணவர்களுக்கு புத்தகங்கள், கற்றல்...

2023-05-26 21:11:21