பொலீயாவின் பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (23) உடல் ரீதியான தாக்குதல்கள் இடம்பெற்றன.
எதிர்க்கட்சி பிரமுகரும் சான்ட்டா குரூஸ் பிராந்தியத்தின் ஆளுனருமான லூயிஸ் பெர்னாண்டோ கெமாச்சோவின் கைது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக அமைச்சர் எதுவார்டோ டெல் கஸ்டில்லோ பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
மேற்படி கைது தொடர்பாக பாராளுமன்றத்தில் அமைச்சர் கஸ்டில்லோ விளக்கமளித்து உரையாற்றியபோது, எதிர்க்கட்சியினரை கடுமையாக சாடினார்.
அப்போது எதிர்க்கட்சி எம்பிகள் சிலர், அரசாங்கத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இப்பதாகைகளை அரசாங்கத்துக்கு ஆதரவான எம்பிகள் பறிக்க முற்பட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சுமார் 20 எம்பிகள் இம்மோதலில் ஏற்பட்டனர். பல நிமிட நேரம் இந்த மோதல்கள் நீடித்தன என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பொலீவிய பாராளுமன்றத்தில் இதற்கு முன்னரும் மோதல்கள் கைகலப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM