இத்தாலியின் பெர்காமோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாலி பெர்கமோவில் வசித்து வந்த சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இத்தாலியின் பெர்காமோவில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்த் திசையில் இருந்து வந்த கொள்கலன் வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த சஞ்சீவ பிரதீப், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
வென்னப்புவ கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற இவர் 24 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் வேலைக்கு சென்று தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.
உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோவின் இறுதிக் கிரியைகள் கடந்த 21ஆம் திகதி இத்தாலியின் பெர்கமோவில் இடம்பெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM