இங்­கி­லாந்­துக்கு எதி­ரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் யுவராஜ் சிங் மற்றும் டோனி ஜோடி அதி­ர­டி­யாக ஆட, அஷ்வின் மூன்று விக்­கெட்­டுக்­களை வீழ்த்த இந்­திய அணி 15 ஓட்டங்களால் வெற்­றி­பெற்று தொட­ரையும் தன்­வ­சப்­ப­டுத்­தி­யது.

இங்­கி­லாந்து -– இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்­க­னவே முதல் போட்­டியில் இந்­தியா வெற்­றி­பெற்ற நிலையில் இரண்­டா­வது போட்டி நேற்று நடந்­தது. இந்தப் போட்­டியில் முதலில் ஆடிய இந்தியா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து திணற, யுவராஜ் சிங் (150),  டோனி (134) அதி­ர­டி­யாக ஆடி அணியை மீட்டனர்.

இறுதியில் இந்­திய அணி 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 381 ஓட்­டங்­களைப் பெற்­றது.

அதன்­பி­றகு வெற்றி இலக்கைத் துரத்­திய இங்­கி­லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 366 ஓட்­டங்­களைப் பெற்று 15 ஓட்­டங்­களால் தோல்­வி­ய­டைந்­தது. 

இங்கிலாந்தின் மோர்கன் 102 ஓட்­டங்­களைப் பெற்றார். இந்த தோல்வியின் மூலம் ஒருநாள் தொடரை இழந்தது இங்கி லாந்து. ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தெரிவானார்.