பண்டாரவளை ஒபடெல்ல வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (24) காலை ஆரம்பமானபோது குளவி கொட்டுக்கு இலக்காகிய 6 மாணவர்களும் அவர்களுடன் சென்ற ஐந்து பெற்றோரும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை அருகே உள்ள தனியார் காணி ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்தே அவர்களைக் கடுமையாகக் கொட்டியுள்ளது.
இதன்காரணமாக பண்டாரவளை வலயக் கல்வி அலுவலகம் குறித்த பாடசாலையை இன்று மூட நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, குளவி கொட்டியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM