சூரியின் 'கொட்டுக்காளி' படப்பிடிப்பு நிறைவு

Published By: Ponmalar

24 May, 2023 | 12:48 PM
image

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் 'கொட்டுக்காளி' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது என பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

'கூழாங்கல்' எனும் திரைப்படத்தை இயக்கி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த படைப்படியான பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கொட்டுக்காளி'.

இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார். எஸ். சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை கணேஷ் சிவா தொகுத்திருக்கிறார்.

கிராமப்புற வீர விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டையை மையப்படுத்தியும், சண்டை சேவலை வளர்க்கும் வீரர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தியும் தயாராகும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் டைட்டில் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பட குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. விரைவில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் சிவகார்த்திகேயன் சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, 'கனா', 'நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா', 'வாழி', 'டாக்டர்', 'டான்' ஆகிய படங்களை தயாரித்து அதிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

அவருடைய தயாரிப்பில் தயாராகியுள்ள 'கொட்டுக்காளி' படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'விடுதலை' படத்தின் வெற்றிக்குப் பிறகு நகைச்சுவை நடிகரான சூரி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பதால்.. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரைம் வீடியோவில் வெளியாகும் கதிர் -...

2025-02-12 16:22:53
news-image

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட...

2025-02-12 15:59:29
news-image

யோகி பாபு நடித்திருக்கும் 'லெக் பீஸ்'...

2025-02-12 14:51:36
news-image

'காதல் என்பது பொதுவுடமை' படத்தின் இசை...

2025-02-11 22:33:07
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் பிரதீப்...

2025-02-11 17:30:29
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின்...

2025-02-11 17:20:45
news-image

நடிகர் லியோ. சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2025-02-11 17:19:29
news-image

நடிகர் சூரி வெளியிட்ட நடிகர் அஜய்...

2025-02-11 16:47:24
news-image

இயக்குநர் நெல்சன் வெளியிட்ட நடிகர் தர்ஷனின்...

2025-02-11 16:37:24
news-image

நடிகர்கள் கோபி - சுதாகர் இணையும்...

2025-02-11 16:37:08
news-image

கண்ணை மூடிக்கொண்டு 'கிஸ்' ( KISS)...

2025-02-11 16:36:45
news-image

அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய...

2025-02-10 15:28:51