ஜூலையில் வெளியாகும் ஆர். ஜே. பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்'

Published By: Ponmalar

24 May, 2023 | 12:28 PM
image

துடுப்பாட்ட வர்ணனையாளரும், நடிகருமான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சிங்கப்பூர் சலூன்' எனும் திரைப்படம் ஜூலையில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் கோகுல் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.

இவருடன் நடிகர் நடிகர்கள் சத்யராஜ், ஜீவா, லால், ரோபோ சங்கர், ஷிவானி ராஜசேகர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்.

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். முடி திருத்தும் சிகை அலங்கார கலைஞர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த திரைப்படம் ஜூலையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், டீசர், ட்ரெய்லர் மற்றும் பட வெளியீட்டு திகதி ஆகியவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரான 'எல். கே. ஜி', 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' என அனைத்து படங்களும் ஆர். ஜே. பாலாஜிக்கு வெற்றியை அளித்ததால், இந்த கூட்டணியில் தயாராகி வெளியாக இருக்கும் 'சிங்கப்பூர் சலூன்' எனும் திரைப்படத்திற்கும் திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்