சர்­வ­தேச கொக்கைன் வர்த்­த­கத்­துடன் தொடர்­பு­டைய இலங்­கை­யர்கள் இருப்பின் அவர்­களைக் கைது­செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­து­மாறு, கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்  பிரி­வுக்கு  நேற்றுமுன்தினம் உத்­த­ர­விட்­டுள்­ளது. 

கொழும்பு துறை­மு­கத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கப்­பலில் இருந்து கொக்கைன் போதைப் பொருள் கைப்­பற்­றப்­பட்­டமை தொடர்­பான வழக்கு நேற்றுமுன்தினம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

அண்­மையில் குறித்த கப்­பலில் இருந்து 928 கிலோ­கிராம் கொக்கைன் மீட்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. 

இது குறித்த விசா­ர­ணைகள் இன்னும் நிறை­வ­டை­ய­வில்லை என, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரி­வினர்  நீதி­மன்­றத்தில் தெரி­யப்­ப­டுத்­தினர்.

இத­னை­ய­டுத்தே விட­யங்­களை ஆராய்ந்த கொழும்பு பிர­தம நீதிவான் லால் பண்­டார விரைவில் இந்த விசா­ர­ணை­களை நிறைவு செய்ய நட­வ­டிக்கை எடுக்குமாறும் சந்தேக நபர்களைக் கைதுசெய்யும் வரை வழக்கை ஒத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.