(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பிரதி பலனாக அடுத்த ஆண்டு இலகு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு முதலீட்டாளர்களுடன் விசேட கலந்துரையாடல்களின் ஈடுபடவுள்ளார். இதன் போது ஜைக்கா நிறுவனத்துடன் இலகு ரயில் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.
அதற்கமைய அடுத்த ஆண்டு இந்த வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க முடியும் என்று நம்புகின்றோம். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது தூதுக்குழுக்களுடன் ஆடம்பரமாக செல்லவில்லை. செலவுகளைக் குறைத்து மிக எளிமையாகவே சென்றிருக்கின்றார்.
எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் 2030 க்குள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல்களை நடத்துவதால் எவ்வித மாற்றமும் இடம்பெறப்போவதில்லை என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM