ஓமந்தை இரா­ணுவ முகாமை அகற்­று­வ­தற்கு எவ்­வி­த­மான தேவையும் இது­வ­ரையில் ஏற்­ப­ட­வில்லை. எனவே குறித்த இரா­ணுவ முகாம் தொடர்ந்தும் அந்த பகு­தியில் செயற்­படும் என தெரி­வித்த  இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் செனி­வி­ரத்ன, ஆனால் பொது மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறு­கையில், ஓமந்­தையில் அமைந்­துள்ள இரா­ணுவ முகாம் அகற்­றப்­ப­ட­வில்லை. ஓமந்தை இரா­ணுவ முகாம் அகற்­றப்­பட்டு விட்­ட­தா­கவும் அங்­கி­ருந்த படை­யினர் கொழும்­பிற்கு அழைக்கப்­பட்­ட­தா­கவும் வெளி­யான தக­வல்­களில் எவ்­வி­த­மான உண்மைத்தன்­மையும் இல்லை.

ஆனால் இரா­ணுவ முகா­முடன் இணைந்­தி­ருந்த பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள்  மாத்­திரம் விடு­விக்­கப்­பட்டு வவு­னியா அர­சாங்க அதி­ப­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. தொடர்ந்தும் இங்கு காணிகள் தொடர்­பான சிக்கல் நிலை காணப்­ப­டு­கின்­றது. இவற்றை எம்மால் தீர்த்து வைக்க முடி­யாது.  எனவே தான் காணி­களை அர­சாங்க அதி­ப­ரிடம் கைய­ளித்­துள்ளோம். தொடர்ந்தும் அங்கு இராணுவ முகாம் இயங்குவதுடன், படையினர் கடமைகளில் ஈடுபடுவார்கள் என குறிப்பிட்டார்.