தென் ஆபிரிக்க மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் மருமகன் முறையான அந்நாட்டு மன்னர் ஒருவர் கடத்தல், தாக்குதல் மற்றும் தீவைப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் 12 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மன்னர் புயிலெகயா டலின்டைபோ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் செய்த மேன்முறையீடுகள் தோல்வியடைந்ததையடுத்தே அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.