ஜனாதிபதி ஜப்பான் விஜயம் : 28ஆவது ஆசியாவின் எதிர்காலம் மாநாட்டில் உரையாற்றுவார்

Published By: Nanthini

24 May, 2023 | 09:24 AM
image

டோக்கியோவில் நடைபெறும் 28 ஆவது ஆசியாவின் எதிர்காலம் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (24) ஜப்பான் செல்லவுள்ளார்.

ஜப்பானின் ஏற்பாட்டில் 28 ஆவது ஆசியாவின் எதிர்காலம் மாநாடு இம்மாதம் 24 - 27 ஆம் திகதிவரை தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.

அதேவேளை இவ்விஜயத்தின்போது ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நிதி அமைச்சர் சுசுகி ஷுனிச்சி, வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாஸா மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்புக் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

அதுமாத்திரமன்றி இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய கலாசார உறவுகளை ஊக்குவிப்பதுடன் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றிவரும் ஜப்பான் - இலங்கைப் பாராளுமன்ற நட்புறவுக்கழகத்தின் அதிகாரிகளையும் ஜனாதிபதி இதன்போது சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் இதன்போது டோக்கியோவில் உள்ள இலங்கைத்தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டைத் தொடர்ந்து, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு மற்றும் ஜப்பான் - இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு சபையுடன் இணைந்து வர்த்தக சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சபையுடன் கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46
news-image

இந்தியா–இலங்கை ஆடை வர்த்தக மாநாடு!

2026-08-08 09:47:56
news-image

மெகசின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதி...

2026-08-08 09:19:59
news-image

வத்தளை பிறந்தநாள் விழா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி...

2026-08-08 09:17:29