படையினருடன் புலிகளை ஒன்றிணைப்பது கோழைத்தனமானது : நினைவுத்தூபி அமைக்கும் தீர்மானம் கைவிடப்பட வேண்டும் - சரத் வீரசேகர

Published By: Nanthini

23 May, 2023 | 09:45 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினரையும், விடுதலைப் புலிகளையும் ஒன்றிணைத்து  நினைவுகூரும் வகையில் தூபி அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை கோழைத்தனமானது. 

அரசாங்கத்தின் தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன். தீர்மானம் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) வர்த்தமானி கட்டளைகள் மீதான விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூறும் வகையில் 'நினைவு தூபி'ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.இதனை நல்லிணக்கம் என்று குறிப்பிட கூடாது.கோழைத்தனமான செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படையினரையும்,விடுதலை புலிகள்  அமைப்பினரையும்  எவ்வாறு ஒருமித்து பார்க்க  முடியும்.நாட்டில் அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே முப்படையினர் போராடினார்கள்.விடுதலை புலிகள் அமைப்பினர் நாட்டு எதிராக செயற்பட்டார்கள்.

முப்படையினரையும்,விடுதலை புலிகளையும் ஒருமித்து பார்க்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன்.ஆகவே நினைவு தூபி அமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

திருகோணமலை மாவட்டத்தில்  சியாம் நிகாய மத வழிபாட்டுக்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமின்றி தடையேற்படுத்துவார்களாயின் பாரிய அழிவு ஏற்படும் என்று நான் குறிப்பிட்ட கருத்தின் நோக்கத்தை அறியாமல்  பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்களையிட்டு கவலையடைகிறேன்.

இலங்கை தேரவாத பௌத்த நாடு என்பதை மறுக்க முடியாது.நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள்  உள்ளன.இதன் காரணமாகவே இலங்கை பௌத்த நாடு என்று குறிப்பிடுகிறோம்.அதனை விடுத்து இனவாத அடிப்படையில் இலங்கை பௌத்த நாடு என்று குறிப்பிடவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதில் சட்டமா அதிபர்...

2023-11-30 10:31:42
news-image

முச்­சக்­கர வண்­டிக்­குப் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்து...

2023-11-30 09:59:25
news-image

வெலிகந்தயில் பஸ் குடைசாய்ந்ததில் 30 பயணிகள்...

2023-11-30 09:55:50
news-image

மின்சாரம் தாக்கி தந்தையும் அவரது மகளும்...

2023-11-30 09:48:45
news-image

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் குற்றப்புலனாய்வுப் பிரிவில்

2023-11-30 09:36:54
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு

2023-11-30 09:34:02
news-image

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

2023-11-30 09:52:05
news-image

கடமையை பொறுப்பேற்றார் தேசபந்து தென்னக்கோன்

2023-11-30 09:26:37
news-image

பிள்ளையான் வடக்கு மாகாணம் குறித்தும் அவதானம்...

2023-11-29 19:10:16
news-image

மத்தள விமான நிலையத்தால் வருடாந்தம் 2...

2023-11-29 20:35:34
news-image

மழை அதிகரிக்கும்...

2023-11-30 06:21:05
news-image

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா ...

2023-11-29 19:07:39