(இராஜதுரை ஹஷான்)
'டில்மா' தூய தேயிலை வர்த்தக நாமத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே.பெர்னாண்டோ தேயிலை தொழிற்றுறையில் கடந்து வந்த நினைவுகளை எடுத்துரைக்கும் வகையில் 'தேநீருக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன்' என்ற கருப்பொருளில் உருவான 'த ஸ்டோரி ஒப் சிலோன் டி மேக்கர்' என்ற நூல் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.
தேயிலை வர்த்தகத்தில் நீண்டகால அனுபவம், திறமைவாய்ந்த டில்மா நிறுவன தலைவர் மெரில் ஜே.பெர்னாண்டோவின் விடாமுயற்சி டில்மா நிறுவனம் சர்வதேச சந்தையின் உன்னதமான இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு பிரதான காரணியாக உள்ளது.
1974ஆம் ஆண்டு மெரில் ஜே.பெர்னாண்டோவினால் டில்மா (சிலோன் டி சர்விஸ் பி.எல்.சி) ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியம், துருக்கி, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், லித்துவேனியா, போலந்து ஹங்கேரி, கனடா உட்பட உலகில் பெரும்பான நாடுகளில் டில்மா தடம் பதித்துள்ளமை பாரிய வெற்றியாகும்.
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்ற போதிலும் டில்மா என்ற வர்த்தக நாமத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கைத் தேயிலையானது பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு பக்குவமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
தூய்மையான முறையில் உயர் தரத்துடன் ஏற்றுமதி செய்யபடுவதால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட்ட 100க்கும் அதிகமான நாடுகளில் டில்மா வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட தேயிலைக்கு அதிக கேள்வி காணப்படுகிறது.
டில்மா தேயிலையை பொறுத்தவரையில் அதன் தரம் உறுதியான முறையில் பேணப்பட வேண்டும் என்பதில் அதன் ஸ்தாபகர் இலங்கையில் 40 வருடங்களுக்கும் அதிகமாக தேயிலை வர்த்தகத்தில் புகழ்பெற்று விளங்கும் மெரில் ஜே பெர்னாண்டோ உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார்.
அந்த வகையில் டில்மா தேயிலை தொடர்ந்து அதன் தரத்தில் முன்னிலை வகிக்கிறது. முதன்முதலில் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமான டில்மா தேயிலை வரத்தகம் அதனை தொடர்ந்து படிப்படியாக உலகில் பல்வேறு நாடுகளுக்கு அறிமுகமானதோடு உன்னதமானதும் தூய்மையானதும் தரத்தில் தனித்துவமானதுமான டில்மா வர்த்தக நாமம் தேயிலைக்கான கேள்வி உலகளாவிய ரீதியில் பரிணாமமடைந்தது.
உலகில் பல்வேறு நாமங்களில் தேயிலை பொதிகள் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் டில்மா வர்த்தக நாமம் தேயிலை சர்வதேச ரீதியில் அங்கீகாரம், கேள்வி ஆகியவற்றில் நிலைத்து நிற்பதற்கு பிரதான காரணம் நுகர்வோரின் தேவையறிந்து சேவை செய்வதாகும்.
அவுஸ்திரேலியாவை தொடர்ந்து நியூசிலாந்திலும் இலங்கையின் உற்பத்தியான தூய டில்மா தேயிலைக்கு நிறைந்த வரவேற்பு காணப்படுகிறது. முதலில் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த டில்மா அங்கிருந்து நியூசிலாந்து உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் தனக்கான சந்தை வாய்ப்புக்களை ஸ்திரப்படுத்திக்கொண்டது. குறிப்பாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 5 நட்சத்திர விடுதிகளில் டில்மா தேயிலை பயன்படுத்தப்படுவது பெருமையாகும்.
எமிரேட்ஸ் விமான சேவை கடந்த 30 ஆண்டுகாலமாக டில்மா தேயிலையை வெளிநாடுகளுக்கு எடுத்து செல்கிறது. அதேபோன்று 2019 ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் தனது 'எயார் பஸ் -380' என்ற விமான சேவை யில் ஒரு விசேட விருந்து உபசாரத்தின்போது டில்மா தேநீர் அதிகளவு பயன்படுத்தப்பட்டது.
மெரில் ஜே. பெர்னாண்டோவின் அயராத முயற்சியாலும் அனுபவத்தினாலும் டில்மா 'தூய இலங்கை தேயிலை' என்ற மகுடத்தில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட குறித்த தேயிலையானது அவரது புதல்வர்களான டிலான் மற்றும் மலிக் ஆகியோரின் பெயரின் முதலெழுத்தின் அடிப்படையில் பொறிக்கப்பட்ட வர்த்தக நாமமாகும். இன்று டில்மா தேயிலையானது உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளது.
ஆரம்பகாலத்தில் இலங்கையிலிருந்து 200 மில்லியன் கிலோகிராம் தேயிலை வருடாந்தம் பெரிய பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரித்தானிய சந்தையில் 30 வீத பங்குகளை தன்வசப்படுத்திக்கொண்டது. தற்போது துருக்கி, ஈராக், ரஷ்யா, ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு டில்மா அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அந்த வகையில் 2015ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடைபெற்ற 'அமைதிக்கான வர்த்தக விருது' மெரில் ஜே. பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டது. வர்த்தக கொள்கை, அர்ப்பணிப்பு, மக்களுக்கான சேவை ஆகியவற்றை உறுதிப்படுத்தியதால் டில்மா இந்த விருதை தனதாக்கிக் கொண்டது.
2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மெரில் ஜே. பெர்னாண்டோவுக்கு 'தேசமானி விருது வழங்கி கௌரவித்தார்.இவ்வாறு பல பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள மெரில் ஜே. பெர்னாண்டோவின் நிர்வாகத்தினால் டில்மா பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக காணப்படுகிறது.
தேயிலை உற்பத்தி தொழிற்றுறையில் தேசிய மற்றும் சர்வதேச சந்தையில் தனக்கான நிலையான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள 'டில்மா' தூய தேயிலை வர்த்தக நாமத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே.பெர்னாண்டோ தேயிலை தொழிற்றுறையில் கடந்து வந்த நினைவுகளை எடுத்துரைக்கும் வகையில் 'தேநீருக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன்' என்ற கருப்பொருளில் உருவான 'த ஸ்டோரிஒப் சிலோன் டி மேக்கர்' என்ற நூல் பல சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள டில்மா தொழிற்சாலை மண்டபத்தில் கடந்த 17ஆம் திகதி மாலை நடைபெற்றது.
நிகழ்வில் டில்மா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலான் பெர்னாண்டோ, நிறுவனத்தின் பணிப்பாளர் மலிக் பெர்னாண்டோ, பிரதித் தலைவர் ஹிமேந்திர குணசேகர மற்றும் ப்ரின்ட் கெயார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.ஆர்.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பிரதம அதிதிகளாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் உட்பட பிரதான நிலை தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
( படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார் )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM