“தேநீ­ருக்­காக என் வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்தேன்' எனும் கரு­ப்பொ­ருளில் உரு­வான 'த ஸ்டோரி ஒப் சிலோன் டி மேக்கர்' என்ற நூல் வெளியீடு

23 May, 2023 | 04:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

'டில்மா' தூய தேயிலை வர்த்­தக நாமத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே.பெர்­னாண்டோ தேயிலை தொழிற்­று­றையில் கடந்து வந்த நினை­வு­களை எடுத்­து­ரைக்கும் வகையில் 'தேநீ­ருக்­காக என் வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்தேன்' என்ற கரு­ப்பொ­ருளில் உரு­வான 'த ஸ்டோரி ஒப் சிலோன் டி மேக்கர்' என்ற நூல் கடந்த புதன்கிழமை வெளி­யி­டப்­பட்­டது.

தேயிலை வர்த்­த­கத்தில் நீண்டகால அனு­பவம், திற­மை­வாய்ந்த டில்மா நிறு­வன தலைவர் மெரில் ஜே.பெர்னாண்­டோவின் விடா­மு­யற்சி டில்மா நிறு­வனம் சர்­வ­தேச சந்­தையின் உன்­ன­த­மான இடத்தை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்கு பிர­தான கார­ணி­யாக உள்­ளது.

1974ஆம் ஆண்டு மெரில் ஜே.பெர்னாண்டோ­வினால் டில்மா (சிலோன் டி சர்விஸ் பி.எல்.சி) ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஐக்­கி­ய ­இ­ராச்­சியம், துருக்கி, தென்­னாபி­ரிக்கா, பாகிஸ்தான், லித்­து­வே­னியா, போலந்து ஹங்­கேரி, கனடா உட்­பட உலகில் பெரும்­பான நாடு­களில் டில்மா தடம் பதித்­துள்­ளமை பாரி­ய­ வெற்­றி­யாகும்.

இலங்­கையில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்கு தேயிலை ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்ற போதிலும் டில்மா என்ற வர்த்­தக நாமத்தில் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­படும் இலங்கைத் தேயி­லை­யா­னது பாது­காப்­பாக பொதி செய்­யப்­பட்டு பக்குவமாக அனுப்பி வைக்­கப்­படுகிறது.

தூய்­மை­யான முறையில் உயர் தரத்­துடன் ஏற்­று­மதி செய்­ய­ப­டு­வதால் அவுஸ்தி­ரே­லியா, நியூ­சி­லாந்து உட்­பட்ட 100க்கும் அதி­க­மான நாடு­களில் டில்மா வர்த்தக நாமம் பொறிக்­கப்­பட்ட தேயி­லைக்கு அதிக கேள்வி காணப்­ப­டு­கி­றது.

டில்மா தேயி­லையை பொறுத்­த­வ­ரையில் அதன் தரம் உறு­தி­யான முறையில் பேணப்பட வேண்டும் என்­பதில் அதன் ஸ்தாப­கர் இலங்­கையில் 40 வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மாக தேயிலை வர்த்­த­கத்தில் புகழ்பெற்று விளங்கும் மெரில் ஜே பெர்­னாண்டோ உறு­தி­யான நிலைப்­பாட்டில் உள்ளார்.

அந்த வகையில் டில்மா தேயிலை தொடர்ந்து அதன் தரத்தில் முன்­னிலை வகிக்­கி­றது. முதன்முதலில்  அவுஸ்தி­ரே­லி­யாவில் ஆரம்­ப­மான டில்மா தேயிலை வரத்­தகம் அதனை தொடர்ந்து படிப்­ப­டி­யாக உலகில் பல்­வேறு நாடு­க­ளுக்கு அறி­மு­க­மா­ன­தோடு உன்­ன­த­மா­னதும் தூய்­மை­யா­னதும் தரத்தில் தனித்­து­வ­மா­ன­து­மான டில்மா வர்த்­தக நாமம் தேயி­லைக்­கான கேள்வி உல­க­ளா­விய ரீதியில் பரி­ணா­மம­டைந்­தது.

உலகில் பல்­வேறு நாமங்­களில் தேயிலை பொதிகள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்ற போதிலும் டில்மா வர்த்­தக நாமம் தேயிலை சர்­வ­தேச ரீதியில் அங்­கீ­காரம், கேள்வி ஆகி­ய­வற்றில் நிலைத்து நிற்­ப­தற்கு பிர­தான காரணம் நுகர்­வோரின் தேவை­ய­றிந்து சேவை செய்­வ­தாகும்.

அவுஸ்தி­ரே­லி­யாவை தொடர்ந்து நியூ­சி­லாந்­திலும் இலங்­கையின் உற்­பத்­தி­யான தூய டில்மா தேயி­லைக்கு நிறைந்த வர­வேற்பு காணப்­ப­டு­கி­றது. முதலில் இலங்­கை­யி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லியா நோக்கி தனது பயணத்தை ஆரம்­பித்த டில்மா அங்­கி­ருந்து நியூ­சி­லாந்து உள்­ளிட்ட நூற்­றுக்கும் அதி­க­மான நாடு­களில் தனக்­கான சந்தை வாய்ப்­புக்­களை ஸ்திரப்­ப­டுத்­திக்­கொண்­டது. குறிப்­பாக ஆசிய பசுபிக் பிராந்­தி­யத்தில் உள்ள 5 நட்சத்திர விடு­தி­களில் டில்மா தேயிலை பயன்­ப­டுத்­த­ப்ப­டு­வது பெரு­மை­யாகும்.

எமிரேட்ஸ் விமான சேவை கடந்த 30 ஆண்டுகால­மாக டில்மா தேயி­லையை வெளி­நா­டு­க­ளுக்கு எடுத்து செல்­கி­றது. அதேபோன்று 2019 ஆம் ஆண்டில் எமிரேட்ஸ் தனது 'எயார் பஸ் -380' என்ற விமான சேவை­ யில் ஒரு விசேட விருந்து உப­சா­ரத்தின்போது டில்மா தேநீர் அதி­க­ளவு பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

மெரில் ஜே. பெர்­னாண்­டோவின் அய­ராத முயற்­சி­யாலும் அனு­ப­வத்­தி­னாலும்  டில்மா 'தூய இலங்கை தேயிலை' என்ற மகு­டத்தில் சர்­வ­தேச ரீதியில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட குறித்த தேயி­லை­யா­னது அவ­ரது புதல்­வர்­க­ளான டிலான் மற்றும்  மலிக் ஆகி­யோரின் பெயரின் முத­லெ­ழுத்தின் அடிப்­ப­டையில் பொறிக்­கப்­பட்ட வர்த்­தக நாம­மாகும். இன்று டில்மா தேயி­லை­யா­னது உல­க­ளா­விய ரீதியில் இலங்­கைக்கு பெருமை சேர்த்­துள்­ளது.

ஆரம்பகாலத்தில் இலங்­கை­யி­லி­ருந்து 200 மில்­லியன் கிலோகிராம் தேயிலை வருடாந்தம் பெரிய பிரித்­தா­னி­யா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து பிரித்­தா­னிய சந்­தையில் 30 வீத பங்­கு­களை தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொண்­டது.  தற்­போது துருக்கி, ஈராக், ரஷ்யா, ஈரான் உட்­பட மத்­திய கிழக்கு நாடுகளுக்கு டில்மா அதி­க­ளவில் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.

அந்த வகையில் 2015ஆம் ஆண்டு ஒஸ்­லோவில் நடை­பெற்ற 'அமைதிக்­­­கான வர்த்­தக விருது' மெரில் ஜே. பெர்­னாண்­டோ­வுக்கு வழங்­கப்­பட்­டது. வர்த்­தக கொள்கை, அர்ப்­ப­ணிப்பு, மக்­க­ளுக்­கான சேவை ஆகி­ய­வற்றை உறு­திப்­ப­டுத்­தி­யதால் டில்மா இந்த விருதை தன­தாக்கிக் கொண்­டது.

2019ஆம் ஆண்டு அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மெரில் ஜே. பெர்­னாண்­டோ­வுக்கு 'தேச­மானி விருது வழங்கி கௌர­வித்தார்.இவ்­வாறு பல பெரு­மை­களை தன்­ன­கத்தே கொண்­டுள்ள மெரில் ஜே. பெர்னாண்­டோவின் நிர்­வா­கத்­தினால் டில்மா பல குடும்­பங்­களின் வாழ்­வா­தா­ர­மாக காணப்­ப­டு­கி­றது.

தேயிலை உற்­பத்தி தொழிற்­று­றையில் தேசிய மற்றும் சர்­வ­தேச சந்­தையில் தனக்­கான நிலை­யான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள 'டில்மா' தூய தேயிலை வர்த்­தக நாமத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே.பெர்­னாண்டோ தேயிலை தொழிற்­று­றையில் கடந்து வந்த நினை­வு­களை எடுத்­து­ரைக்கும் வகையில் 'தேநீ­ருக்­காக என் வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்தேன்' என்ற கருப்­பொ­ருளில் உரு­வான 'த ஸ்டோரிஒப் சிலோன் டி மேக்கர்' என்ற நூல் பல சுவா­ரஸ்­ய­மான விட­யங்­களை உள்­ள­டக்கி வெளி­யி­டப்­பட்டிருக்கிறது.

இந்த நூல் வெளி­யீட்டு நிகழ்வு கொழும்பு மாளி­காவத்தை­யி­லுள்ள டில்மா தொழிற்சாலை மண்டபத்தில்  கடந்த 17ஆம் திகதி மாலை நடை­பெற்றது. 

நிகழ்வில் டில்மா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலான் பெர்னாண்டோ, நிறுவனத்தின் பணிப்­பாளர் மலிக் பெர்னாண்டோ, பிரதித் தலைவர் ஹிமேந்திர குணசேகர மற்றும் ப்ரின்ட் கெயார் நிறுவனத்தின் முகா­மைத்துவ பணிப்பாளர் கே.ஆர்.ரவீந்­திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் பிரதம அதிதிகளாக எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகா­மைத்­துவ பணிப்பாளர் குமார் நடேசன், நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் உட்­பட பிரதான நிலை தொழில­திபர்­கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்­பிடத்தக்கது.

( படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08