ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரருக்கு மஹா கும்பாவிஷேகம்!

Published By: Ponmalar

23 May, 2023 | 04:26 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் திருவருள்மிகு பூலோகநாயகி உடனமர் வேகாவனேஸ்வரர் ( தான்தோன்றீஸ்வரர் ) பெருமானுக்கு எதிர்வரும் 01.06.23 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

மகேந்திரபுரி, ஸ்வர்ணபுரி, ராவணேஸ்வரம் என புராண இதிகாசங்களிலே புகழப்பட்டதும் இந்துமா கடலில் மத்தியில் இருக்கின்றதும் மாம்பழ வடிவாகிய இயற்கை அழகுடன் கூடியதுமாகிய லங்காதீப கற்பத்தின் வடபால் இயற்கை வளங்களும் ஆறுகளும் குளங்களும், வற்றாத நீர் ஊற்றுக்களை தன்னகத்தே கொண்டதும் வந்தாரை வரவேற்று விருந்தோம்பும் பாங்கும் அடங்காப்பற்றின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் நல்லாட்சி புரிந்த முல்லை மாநாகரில் மேற்கே 15 ஆவது மைல்கல் தூரத்தில் ஒட்டுக்கள் சுட்டதனால் ஒட்டுசுட்டான் என்கின்ற காரணபெயரையும் கிழக்கே பிராமணகுளமும், தெற்கே குடிதாங்கியார் குளமும், மேற்கே விடத்தல் குளமும் வடக்கே காக்கைபணிக்கன்குளமும்,இயற்கை நீரூற்றுக்களாக அமைய பாலாறும்.தயிராறும் பெருகி வழிந்தோட வேண்டுவோர்க்கு வேண்டுவதை ஈந்தாளும் ஒட்டுக்களைச் சுட்டும் வேகாமல் வனத்திடை சுயம்புவாகி வந்துதித்து புலோகத்திலே உற்பத்தியாகிய காரணத்தினால் பூலோக நாயகியின் மணாளனாகவும், ஒட்டுக்களை சுட்டும்  வேகாத காரணத்தினால் வேகாவனேனேஸ்வரர் (தான்தோன்றீஸ்வரர்) என்கின்ற திருநாமம் பூண்ட சுயம்புலிங்கப்பெருமானுக்கு நிகழும் மாட்சிமை தங்கிய சோபகிருதி வருடம் உத்தராயண புண்ணிய காலம் இளவேனிற்காலம் வைகாசி மாதம் 18 ஆம் திகதி(01.06.23) வியாழக்கிழமை பூர்வபட்ச துவாதசிதிதியும் சுவாதி நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய முற்பகல் 11.10 மணிதொடக்கம் 12.00 மணிவரையுள்ள சந்திரஹோரையயுடன் கூடிய சிம்ம லக்கின சுப நன்நாளிலே சுயம்பு லிங்கப்பெருமானுக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் நவதள ராஜகோபுரத்திற்கும் மஹா கும்பாபிஷேகப் பொருவிழா இடம்பெற திருவருள் வியாபித்துள்ளது

எனவே அடியவர்கள் அனைவரும் ஆசார சீலர்களாக கலாச்சாரத்தினை பேணிப்பாதுகாத்து ஆலதய்திற்கு வருகைதந்து நடைபெறும் இறை வழிபாடுகளிலும் கிரிகைகளிலும் கலந்து சுபீட்சமாகபேரானந்தப் பெருவாழ்வு வாழ வேண்டுகின்றார்கள் ஆலய முகாமைத்துவ சபையினர்.

கர்மாரம்ப கிரியைகள் எதிர்வரும் 26.05.23 வெள்ளிக்கிழமை தொடங்கி 29,30,31 ஆம் திகதிகளான மூன்று நாட்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று 01.06.23 வியாழக்கிழமை மஹா கும்பாவிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35
news-image

சமூக சேவையாளர் செல்வராசா முரளீதரனுக்கு மெல்போர்ன்...

2023-05-27 12:13:28
news-image

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின் 'இலண்டனிலிருந்து...

2023-05-26 18:12:46
news-image

பன்வில பிரதேச மாணவர்களுக்கு புத்தகங்கள், கற்றல்...

2023-05-26 21:11:21