நாங்கள் எங்கள் இரத்தத்தை வழங்குகின்றோம் அவர்கள் வசதியாக வாழ்கின்றார்கள் - வறுமை பட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள தோட்டத்தொழிலாளர்கள் வேதனை

Published By: Rajeeban

23 May, 2023 | 04:07 PM
image

---------------------

 தோட்ட தொழிலாளர்கள் தாங்கள் நாளொன்றிற்கு 18 கிலோ தேயிலையை பறிக்கவேண்டிய நிலையில் உள்ளபோதிலும் வறுமை காரணமாக உணவை தவிர்க்கவேண்டியுள்ளது பிள்ளைகளிற்கு தொழிலிற்கு அனுப்பவேண்டியுள்ளது என தெரிவித்திருப்பது குறித்து உலகின் முன்னணி தேயிலை நிறுவனங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

---------------

கார்டியனில் வெளியான செய்தியை தொடர்ந்து டெட்லி லிப்டன் போன்ற உலகின் முன்னணி தேயிலை உற்பத்தியாளர்கள் இலங்கையின் தேயிலைதோட்டங்களில் காணப்படும் வாழ்க்கை நிலை குறித்து ஆராயஆரம்பித்துள்ளனர்.

இலங்கையின் பதிவுசெய்யப்பட்ட பத்து  தேயிலை தோட்டங்களில் தொழில்புரியும்  தொழிலாளர்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர் மோசமான நிலையில் வாழ்கின்றனர் என வெளியான தகவல்களை தொடர்ந்து பெயர்டிரேட் ரெயின்பொரெஸ்;ட் அலையன்ஸ் ஆகிய அமைப்புகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இலங்கை முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தவேளை  தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தங்களிற்கு உதவவில்லை என தோட்டத்தொழிலாளர்கள்  தெரிவிக்கின்றனர், இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுகள் எரிபொருட்கள் மற்றும் மருந்துகளின் விலைகள் அதிகரித்தன,ஆனால் ஊதியங்கள் அதிகரிக்கவில்லை.

தங்களிற்கு கிடைக்கவேண்டியதை மேற்பார்வையாளர்கள் வழங்க மறுக்கின்றனர் வார்த்தைகளால்  நிந்திக்கின்றனர் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

தேயிலை கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களிடம் சிறிதளவு பணம் கூட இல்லை இதனால் உணவுஉண்பதை கூட தவிர்க்கவேண்டியுள்ளது பிள்ளைகளை தொழில்களிற்கு அனுப்பவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள டெட்லி இலங்கையின் சில முன்னணி தேயிலை தோட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

லிப்டன் மற்றும் பிஜிடிப்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எக்கெட்டெரா இது தொடர்பில் ரெயின்போரஸ்ட் அலையன்சை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கார்டியன் விஜயம் மேற்கொண்ட தேயிலைதோட்டங்களில் இருந்து தேயிலையை பெறும் யோர்க்சயர் டீ தொடர்புபட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் தேயிலை தோட்டங்களில் 30000க்கும் அதிகமானவர்கள் தொழில்புரிகின்றனர்இலங்கையின் பெரும் மலைகள் அடங்கிய மத்திய மலைநாட்டிலேயே இவை காணப்படுகின்றன.

2022 இல் இந்ததொழில்துறை ஏற்றுமதி மூலம் 1.097 பில்லியன் டொலர்களை வருமானமாக உழைத்தது.

2021 இல் பேரழிவை ஏற்படுத்திய உரத்தடையை தொடர்ந்து இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டது முதல் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர்.இந்த உரத்தடை தேயிலை விளைச்சலை குறைத்தது,கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உற்பத்தி வீழ்ச்சியை ஏற்படுத்தியது,

ஆயிரம் ரூபாய் உழைப்பதற்காக தொழிலாளர்கள் 18 கிலோதேயிலை பறிக்கவேண்டும்,இதற்கு குறைவாக பறித்தால் ஒவ்வொரு கிலோவிற்கும் குறைவான எண்ணிக்கையே அவர்களிற்கு கிடைக்கும்;.

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியினால் இந்த தொழில்துறையின் சராசரி தினசரி ஊழியம் 2023 பெப்ரவரி வரையிலான 24 மாதங்களில் ஆகக்குறைந்துள்ளது.

தோட்டப்பகுதிகளில் 44 வீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன என ஜனவரியில் ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் மதிப்பிட்டது- நகரப்புறங்களை விடஇது இரண்டு மடங்கு அதிகமாகும்.

காண்காணிப்பாளர்கள் தங்களிற்கு குறைவான சம்பளத்தை வழங்க முயன்றனர் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர், நாங்கள் நல்ல தேயிலை கொழுந்தை பறித்தாலும் அதுபோதுமானதல்ல என அவர்கள் தெரிவிப்பார்கள் அல்லது எங்கள் ஊதியத்தை குறைக்கப்போவதாகதெரிவிப்பார்கள் என லக்ஸ்மன் தேவநாயகி( 33) தெரிவிக்கின்றார்.

நாங்கள் அவர்களிற்கு ஐந்துகிலோ தேயிலையை கொடுத்தால் அவர்கள் இரண்டு அல்லது மூன்று கிலோவிற்கே பணம் வழங்குவார்கள் நாங்கள் ஏன் என கேட்டால் சொன்னதை செய்கின்றோம் என தெரிவிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் சிலவேளைகளில் தோன்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருதேயிலை தோட்டத்தின் மலைப்பகுதியில் தனது கணவர் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கின்றார்  ரங்கஸ்வாமி புவனேஸ்காந்தி உணவிற்காக கடன்படவேண்டியுள்ளது அடிக்கடி உணவை தவிர்க்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளைகளின் தேவைகளிற்காக தனது தேவைகளை கூட (  கூட அலட்சியம் செய்வதாக அவர் தெரிவித்தார்.

வீட்டில் உணவு இல்லாவிட்டால் நான் வேலை செய்யும் இடத்திற்கு உணவை எடுத்துச்செல்லமாட்டேன்  நான் வீட்டிற்கு போகிறேன் என மேற்பார்வையாளர்களிடம் தெரிவித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்துவிடுவேன் ஏனையவர்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருக்கமுடியாது எனவும அவர் தெரிவிக்கின்றார்.

வேகமாக கொழுந்து பறிக்கவேண்டும் என்பதால் அட்டைகள் குறித்து கவலைப்படுவதற்கு நேரமிருக்காது ( அந்த பகுதிகளில் பொதுவான விடயம்) என தெரிவிக்கும் புவனேஸ்காந்தி கடந்தவருடம் தனது கால் அட்டைக்கடியால் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவரிடம் செல்வதற்கு முச்சக்கரவண்டியை பயன்படுத்துவதற்கு பணம் இல்லாததால் ஒருகிலோமீற்றர் நடந்துசென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

அட்டையை பார்ப்பதற்காக வேலையை நிறுத்தினால் ஒருகிலோ குறையும்,தொழில்புரியும்போது அப்படித்தான் நாங்கள் நினைப்போம் என அவர் தெரிவிக்கின்றார்.

என்ன செய்வது என தெரியவில்லை நாங்கள் தோட்டங்களில் வேலைபார்க்கின்றோம்,ஆனால் சம்பளம் இல்லை இதன் அர்த்தம் என்னவென அவர் கேள்வி எழுப்புகின்றார்.

மற்றுமொரு தொழிலாளியான சுப்பிரமணியம்சத்தியவதனி( 40) தோட்டங்களில் பணிபுரிவதை மனிதாபிமானமற்ற விடயமாக உணர்வதாக தெரிவித்தார். நாங்கள் எங்கள்இரத்தத்தை வழங்குகின்றோம் அதனால் அதிகாரிகள் வசதியாக வாழமுடியும் என தெரிவித்தார்.

அரசாங்கத்திடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்களே தேயிலை தோட்டங்களை  நடத்துகின்றன.

பெரும்பாலான தொழிலாளர்கள் மலையகத்தமிழர்கள் - பிரிட்டிஸ் ஆட்சியாளர்களின் காலத்தில் தென்னியந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள்,பெரும்பாலானவர்கள் இன்னமும் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சிறிய வீடுகளிலேயே வாழ்கின்றனர், அவை தற்போது தோட்டங்களிற்கு சொந்தமானவை.

தோட்ட உட்கட்டமைப்பு விவகாரங்களிற்கான இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவை சுரண்டல் அதன் முழுமையான வடிவத்தில் உள்ளதை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்தார்.

அவர்களிற்கு ஒழுக்கமான வேலையை வழங்குவதற்கான இந்தச்செயல்முறையை விரைவுபடுத்தவேண்டும் அல்லது அதற்கான வழிமுறையை கண்டுபிடிக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஐநா, புளேசேர்ட் பெயர்டிரோட் போன்ற அமைப்புகளை ஈடுபடுத்துவதன்மூலம்  அதனை செய்ய முடியும் என்ற உணர்வு எனக்குள்ளது என அவர் குறிப்பிட்டார்.

சில நிறுவனங்கள் நிதியை பெறுவதற்காக தாங்கள் ஒழுக்கரீதியாக செயற்படுவதாக இந்த வெளிநாட்டு அமைப்புகளிற்கு பொய் சொல்லியுள்ளன என குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான் அரசாங்கம்இந்த தேயிலைதோட்டங்களை பிரித்து தொழிலாளர்கள் தங்கள் பணப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்காக அவர்களிற்கு நிலங்களை குத்தகைக்கு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

  

Jeevan Ravindran in Colombo'

guardian

ரஜீபன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15