'உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்' என்ற தொணிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று கல்குடா கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரியின் 63 ஆவது கல்லூரி தினத்தினை முன்னிட்டு பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் நிகழ்வாகும்.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு போதானை வைத்தியசாலை, வாழைச்சேனை தள வைத்தியசாலை மருத்துவ சேவை உத்தியோகஸ்த்தர்களின் பங்குபற்றுதலுடன் பழையமாணவர்களால் இவ் இரத்ததான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டது.
இதில் வைத்தியர் எஸ்.விருஷ் கலந்து கொண்டார்.
குறித்த கல்லூரி தினத்தினை முன்னிட்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வாண்டின் ஜூலை மாதம் வரை கல்லூரியின் வளர்ச்சி கருதி பல்வேறு சமூக நல சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அன்றைய தினங்களில் பாடசாலையின் அபிவிருத்தியில் முன்னின்று உழைத்தவர்களுக்கு பாராட்டப்பட்டு கௌரவிப்பும், சிரமதானம், வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல், விழிப்புணர்வு கருத்தரங்கு என்பன கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளன.
இறுதி நாள் நிகழ்வான 29.07.2023 அன்று கலை கலாச்சார நிகழ்வும் நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM