சிரிய ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த வேண்டும்: பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர்

Published By: Sethu

23 May, 2023 | 01:23 PM
image

சிரியாவின் சிவில் யுத்தத்தின்போது இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் சிரிய  ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர்  கெத்தரின் கொலோனா கூறியுள்ளார். 

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, ஜனாதிபதி அஸாத்துக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டுமா என அமைச்சர் கெத்தரின் கொலோனாவிடம்  கேட்கப்பட்டது.

அப்போது அமைச்சர் கெத்தரின் கொலோனா பதிலளிக்கையில், ஆம், குற்றங்கள் மற்றும் தண்டனை விலக்களிப்புக்கு  எதிரான போராட்டமானது பிரெஞ்சு இராஜதந்திரத்தின் ஒரு பகுதியாகும் எனக் கூறியுள்ளார். 

கடந்தவாரம் சவூதி அரேபியாவில் நடைபெற்ற அரபு லீக் உச்சிமாநாட்டில் சிரிய ஜனாதிபதி அல் அஸாத் பங்குபற்றினார். 10 வருடங்களுக்கு மேலாக இவ்வமைப்பிலிருந்து அல் அஸாத் விலக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எனினும்,  அவருக்கு எதிரான கொள்கையிலிருந்து பிரான்ஸின் நிலைப்பாடு மாறவில்லை என அமைச்சர் கொலோனா கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59
news-image

ஈரானிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் -...

2024-04-15 11:34:42
news-image

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து...

2024-04-14 13:19:17
news-image

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?...

2024-04-14 11:47:04
news-image

இஸ்ரேலிற்கு மரணம் - ஆயிரக்கணக்கான ஈரான்...

2024-04-14 10:03:46