எம்மில் பலருக்கும் நெருங்கிய நட்புகளுடன் கூட பகிர்ந்து கொள்ள இயலாத சில விடயங்கள் மனதில் இருக்கும். மேலும் கடுமையான கர்ம வினைகள் காரணமாக எம்முடைய நோக்கம் நன்றாக இருந்தாலும்... மற்றவர்களை ஆற்றுப்படுத்துவதற்காக உச்சரிக்கும் சொல் கூட, உபத்திரவத்தை வரவழைத்து விடும். இதனால் ஏற்படும் விரிசல்... மனதில் சொல்ல இயலாத வடுவை ஆழமாக ஏற்படுத்திவிடும்.
அன்னியோன்யமாக இருந்த தம்பதிகள் கூட சனி தோஷம், வாஸ்து தோஷம், எதிர்மறை ஆற்றல் போன்ற பல்வேறு சூட்சம விடயங்களால் மனக்கசப்புடன் பிரிந்து வாழ்வார்கள். இதுபோன்ற விடயங்களுக்கு சோதிட வல்லுநர்கள் பரிகாரமாக மயிலிறகை பயன்படுத்துமாறு வழிகாட்டுகிறார்கள்.
மயிலிறகு - ஒருவரின் கடுமையான தோஷத்தை கணிசமாக குறைக்கும் வல்லமை பெற்ற பஞ்சபட்சிகளில் ஒன்று பஞ்சபட்சி சாத்திரங்களில் மயிலும் ஒன்று என்பதை மறந்துவிட இயலாது. மயிலை காண்பதும்.. மயில் தோகை விரித்து நடனமாடுவதை காண்பதும்.. மனதிற்குள் மட்டும் மகிழ்ச்சி அல்ல.. உங்களிடம் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்குவதற்கும் முக்கிய காரணியாகிறது.
மயிலிறகை எம்முடைய வீட்டின் முன் பகுதியில் இடம்பெற வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை எண்ணத்துடன் அல்லது எதிர்மறை ஆற்றலை தீய நோக்கங்களுடன் யாரேனும் செலுத்தினாலும் அதனை தடுக்கும் வல்லமை கொண்டது.
மேலும் எம்முடைய இல்லங்களில் நாளாந்தம் பஞ்ச பூதங்களின் சுழற்சி காரணமாகவும், நாம் வெளியில் சென்று வீட்டுக்குள் நுழையும் போது எம்மையும் அறியாமல் எம்முடன் பயணிக்கும் எதிர்மறை ஆற்றலை வாசலிலேயே தடுத்து, வீட்டினுள் இருக்கும் நேர் நிலையான ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் வல்லமையும் மயிலிறகிற்கு உண்டு. எனவே வீட்டினுள் மயிலிறகினை வைத்துக் கொள்ளுங்கள். சுப பலன்கள் கிட்டும்.
கடுமையான சனி தோசத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் மூன்று மயிலிறகுகளை ஒன்றாக இணைத்து அதனை கருப்பு வண்ண நூலினால் கட்டி அதனை சிறிது கொட்டை பாக்கை நீரில் போட்டு, அந்த நீரில் நனைத்து, அந்த நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். தெளிக்கும்போது, 'ஓம் சனீஸ்வராய நமஹ' என்ற மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சனிக்கிழமைகளில் செய்து வரும் போது உங்களது சனி தோசத்தின் கடுமை நீங்கி, கெடுபலன் குறையும்.
சொந்த வீடு அல்லது வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாஸ்து அம்சம் பார்க்காமல் குடியிருந்தால், அதன் காரணமாக உங்களுக்கு ஏதேனும் தொல்லைகள், அசௌகரியங்கள், மன உளைச்சல்கள் ஏற்பட்டால், இத்தகைய வாஸ்து தோஷத்தை நீக்கவும் மயிலிறகு பயன்படுகிறது. இதன் போது எட்டு மயிலிறகுகளை ஒன்றாக சேர்த்து, அதனை ஒரு வெண்மை நிற நூலினால் கட்டி, அதனை நாம் நாளாந்தம் பூஜை செய்யும் பூஜை அறையில் வைத்து, 'ஓம் சோமய நமஹ' என்ற மந்திரத்தை உச்சரித்து வரவேண்டும். திங்கள், செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் இதனை தொடர்ந்து மேற்கொண்டு வர வாஸ்துவினால் ஏற்பட்ட தோஷம் குறையும்.
எம்மில் பலரும் 'எமக்கு சனி தோசமும் இல்லை. வாஸ்து தோஷமும் இல்லை. ஆனால் செல்வமும் இல்லை. இதற்கு மயிலிறகுகள் ஏதேனும் வகையில் பலனளிக்குமா?' என கேட்பர். ஆம்..! உங்களுக்கும் மயிலிறகு மூலம் பலன் கிடைக்க வேண்டும் என்றால், மயிலிறகு ஒன்றை நகை மற்றும் பணத்தை வைக்கும் அலமாரியில் வைத்து விட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அதனை தொடர்ந்து வணங்கி வருவதன் மூலம், உங்களது அலமாரியில் செல்வ வளம் சேர்வதுடன் அது தொடர்ந்து நீடித்து நிலைக்கவும் செய்யும்.
திருமணமான தம்பதியர்கள் திருமணம் ஆகி மக்கட் செல்வத்தை பெற்ற பிறகு, தம்பதியர்கள் தங்களுக்குள் இருக்கும் எதிர்மறை விடயங்களை சுட்டிக் காட்டுவதால், அவர்களுக்குள் அன்பு மேலோங்கி வளராமல்... வளரக்கூடாத பொறாமை, ஈகோ ஆகியவை உருவாகத் தொடங்கி, உறவு நிலைகளில் விரிசலும், பிரிவும் மனக்கசப்பும் ஏற்பட தொடங்குகிறது. இத்தகைய தம்பதியர்கள் தங்களது படுக்கை அறையில் மயிலிறகை இடம்பெற வைப்பதால், அவர்களுக்குள் இருக்கும் சொல்ல இயலாத பிரச்சனைகள் அகன்று அன்பு அதிகரித்து இல்லறம் சிறக்கும்.
ஊழியர்களை நம்பி தொழில் நடத்தும் தொழிலதிபர்கள், எதிர்பார்த்த அளவிற்கு உற்பத்தி நடைபெறவில்லை என்றால், ஊழியர்களின் மீது கடுமை காட்டாமல், அலுவலகத்தில் உங்களுடைய இருக்கையில் மயிலிறகை இடம்பெறச் செய்யுங்கள். இதன் மூலம் அந்த பகுதியின் அழகியல் தன்மை மேம்படுவதுடன், ஊழியர்கள் தாமாக முன்வந்து ஒருங்கிணைந்து உழைத்து உற்பத்தியை அதிகரிப்பர். இந்த மாயாஜால அதிசயத்தையும் மயிலிறகுகள் செய்து காட்டும்.
எனவே மயில் இறகு உங்களது பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணத்தை தருகிறது என சோதிட நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதனையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM