பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறுவதற்கு முன்னர் ஆரம்பமான இனப்படுகொலை செயற்பாடுகளின் வெளிப்பாடே 1958 ம் ஆண்டின் தமிழர்களிற்கு எதிரான இனவன்முறைகள்.
1958ம் ஆண்டு இனகலவரங்கள் எனவும் அழைக்கப்படும் இந்த இனபடுகொலை ஸ்ரீலங்காவில் தமிழ் ஈழத்தில் ஈழத்தமிழர்களிற்கு எதிராக அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற முதலாவது இனபடுகொலையாகும்.
1958ம் ஆண்டு 22ம் திகதி சிங்களகாடையர்கள் இலங்கையின் பல பகுதிகளில் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள் கொலை செய்ய ஆரம்பித்தனர் பாலியல்வன்முறைகளில் ஈடுபடஆரம்பித்தனர்.
22ம் திகதி ஆரம்பமான இந்த வன்முறைகள் 29 மேவரை நீடித்தன
1958ம் ஆண்டு அவசரகாலநிலை அறிவிக்கப்பட்ட பின்னரும் சிறியளவில் தமிழர்களிற்கு எதிரான வன்முறைகள்தொடர்ந்தன.
இந்த வன்முறைகளில் சிக்கி 300 முதல் 1500 தமிழர்கள் உயிரிழந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது,ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர் -தமிழர்களின் வீடுகள் சொத்துக்கள் சூறையாடப்பட்டன அழிக்கப்பட்டன- தமிழ் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு இலக்கானார்கள்.
வவுனியாவில் இடம்பெறவிருந்த சமஸ்டி கட்சியின் மாநாட்டிற்கு சென்றுகொண்டிருந்த தமிழர்கள் பொலனறுவையில் தாக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் ஆரம்பமாகின.
அதன் பின்னர் வன்முறை நாடு முழுவதும் பரவியது,கொழும்பில் காடையர்கள் சிங்கள பத்திரிகைகளை வாசிக்க முடியாதவர்களை தேடி அலைந்தனர்,சிங்கள பத்திரிகைகளை வாசிக்க முடியாதவர்கள் தாக்கப்பட்டனர்- கொல்லப்பட்டனர்-இந்துமதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்,
ஐந்துநாட்கள் காத்திருந்த பின்னர் அரசாங்கம் அவசரகாலநிலைமையை அறிவித்தது.
தனதுஅரசியல்கண்ணோட்டத்தில் 1958 ம் ஆண்டு கலவரம் முக்கிய இடத்தை வகித்தது என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார்.
1984 மார்ச் மாதம் வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
1958ம் ஆண்டு இனகலவரத்தின் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் என்மீது கடும் தாக்கத்தை செலுத்தின,நான் பாடசாலை மாணவனாகயிருந்தவேளை எப்படி எனது மக்கள் சிங்கள இனவெறியர்களால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர் என்பதை நான் கேள்விப்பட்டேன்.
நான்ஒருநாள் எனது குடும்ப நண்பரான விதவையொருவரை சந்தித்திருந்தேன்,இந்தஇன படுகொலையின் தனிப்பட்ட அனுபவங்களை அவர் என்னிடம் விபரித்திருந்தார் சிங்கள காடையர்கள் கொழும்பில் அவரது வீட்டை தாக்கியுள்ளனர் வீட்டிற்கு தீவைத்த அவர்கள் கணவனை கொலை செய்துள்ளனர்,அவரும் அவரது பிள்ளைகளும் கடும் எரிகாயங்களுடன் உயிர்தப்பினார்கள்,அவரது உடலில் காயங்களை பார்த்தவேளை நான் அதிர்ச்சியடைந்தேன்,.
கொதிக்கும்தாரில் எப்படி சிறுகுழந்தைகளை வீசினார்கள் என்பதை நான் அறிந்தேன்
அவ்வாறான ஈவிரக்கமற்ற கொடுமைகளை நான் அறிந்தவேளை எனக்கு எனது மக்கள் மீதுஇரக்கமும் பாசமும் அதிகரித்தது.
இந்த இனவெறி அமைப்பிலிருந்து எனது மக்களை விடுதலை செய்யவேண்டும் என்ற பெரும் ஆர்வம் எழுந்தது. ஆயுதமேந்தாத அப்பாவி பொதுமக்கள் மீது ஆயுதப்படையினரை பயன்படுத்தும் அமைப்புமுறையை எதிர்கொள்வதற்கு ஆயுதப்போராட்டமே ஒரே வழி என நான் கருதினேன் என விடுதலைப்புலிகளின் தலைவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
சமஸ்டிக்கட்சியின் நீண்டகால தலைவர் விஎன் நவரட்ணம் ( 1910 முதல் 2006) தமிழர் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும( 1991) ; என்ற தனது நினைவுக்குறிப்புகளில் இவ்வாறு குறிப்பிட்டார்.
1958ம் ஆண்டு இனக்கலவரம் இடம்பெற்றவேளை அவர் கொழும்பில் வசித்தார் கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தில் சட்டத்தரணியாக பணியாற்றிக்கொண்டிருந்தார்,1962இல் ஊர்காவல்துறை தொகுதிக்காக இடம்பெற்ற இடைத்தேர்தலில் அவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
காடையர்களால் தான் தாக்கப்பட்டவேளை எதிர்கொண்ட நெருக்கடியை அவர் இவ்வாறு வர்ணித்தார்.
வவுனியா மாநாட்டிற்கு மறுநாள் சிங்களஇராணுவத்தின் காடையர்கள் தமிழர்களை தாக்கும் பொறுப்;பை ஏற்றனர்.அவர்கள் தேவையற்ற அழிவுகள் மற்றும் விரும்பத்தகாத மிருகத்தனத்தில் ஈடுபட்டனர்- கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் அவர்கள் தங்கள் வன்முறைகளை ஆரம்பித்தனர்இஇங்கேயே தமிழர்களின் அனேகமான கடைகளும் வர்த்தக நிலையங்களும் வீடுகளும் வாகனங்களும் காணப்பட்டன .
தங்களால் தாக்க முடிந்த தமிழர்களை எல்லாம் அவர்கள் தாக்கினார்கள்இஇரவான வேளை காடையர்களின் வன்முறை கொழும்பு நகரின் அனைத்து பகுதிகளுக்கும் புறநகர்பகுதிகளிற்கும் பரவியிருந்தது.
அன்றிரவு நாற்பது ஐம்பது காடையர்கள் ஹல்வ்ஸ்டிரொப்பில் உள்ள என வீட்டை தாக்கினார்கள்நான்நீதியமைச்சு மற்றும் உச்சநீதிமன்றகட்டிடங்களிற்கு அருகில் வசித்தேன்நீதிமன்ற வாயில் ஊடாகவே அவர்கள் எனது வீட்டிற்கு வரவேண்டும் அவர்கள் 25 பெட்ரோல் குண்டுகளை வீசி எனது பெயரை சொல்லி சத்தமிட்டார்கள் எனது வீட்டின் முன்பகுதி சேதமாக்கப்பட்டது தளபாடங்கள் கதவுகள் தீப்பிடித்தன ஒன்றை மாத குழந்தை உட்பட 14 வயது சிறுவன் வரை வீட்டில் இருந்தனர்இஎங்களிற்கு ஏதாவது நடந்தால் அங்கிருந்து எங்காவதுஅவர்களை ஓடிவிடுமாறு நாங்கள் கேட்டுக்கொண்டோம் மோசமான சம்பவங்களை எதிர்பார்த்து நாங்கள் கதவில் காத்திருந்தோம்.
டொக்டர் ஈஎம்வி நாகநாதன் சமஸ்டிகட்சியின் வலுவான ஆதரவாளரான அரசாங்கசேவையை சேர்ந்த இளம் ஊழியர் பாலசுப்பிரமணியம் என்பவருடன் என்னை பார்ப்பதற்கு அன்று மாலை வீட்டிற்கு வந்தார்.நான் மறுத்தபோதிலும் அவர் எனது வீட்டிற்கு சென்று சில ஆவணங்களை மீட்கவேண்டும் என வற்புறுத்தினார்.
ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தலையில் காயங்கள் இரத்தம்தோய்ந்த ஆடைகளுடன் திரும்பிவந்தார் அவரது கார் சேதமாக்கப்பட்டிருந்தது
நான் மிகவும் கவனமாக நாகநாதனை கிரான்ட்பாஸில் உள்ள சுலைமான் மருத்துவமனைக்கு கொண்டுசென்றேன்இமருத்துவமனையில் கடவுள் மனிதர்கள் பார்ப்பதை விரும்பாத காட்சிகளை நான் பார்த்தேன்சிங்கள காடையர்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்காக மாத்திரம் போராடவில்லை வலியால் வேதனையால் துடித்துக்கொண்டிருந்தனர்
சில மனிதர்களால் சக மனிதர்களிற்கு எதிராக இழைக்கப்படக்கூடிய கொடுரமான ஈவிரக்கமற்ற செயல்கள் சித்திரவதைகளிற்கு சாட்சியங்களாக அவர்கள் காணப்பட்டனர்.
சுமார் 20,000 தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கைக்குழந்தைகள் என பெருமளவிலானவர்கள் கொழும்பின் இரண்டு அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.அவர்களின் உயிர்களிற்கு காடையர்களால் பெரும் அச்சுறுத்தல் காணப்பட்டதால் அவர்களின் உயிர்களை காப்பாற்ற திருகோணமலை யாழ்ப்பாணத்திற்கு அவர்களை படகுகள் மூலம் அனுப்பவேண்டிய நிலையேற்பட்டது,இந்த உணர்வுகளே ஒரு தலைமுறையின் பின்னர் சுதந்திர போராட்ட வீரர்;களின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தன என வி நவரட்ணம் தெரிவித்தார்.
மேலே குறிப்பிடப்பட்ட வைத்தியர் நாகநாதனிற்கு ( 1906- 71) இனகலவரங்கள் தாக்குதல்கள் புதியவை இல்லை,அவர்மருத்துவர் என்பதால் கொழும்பில் மிகவும் மதிக்கப்பட்டவராக காணப்பட்டாலும் 1956இல் பெடரல் கட்சியின் சத்தியாக்கிரஹ போராட்டத்தின் போது அவர் தாக்கப்பட்டார்.1960 முதல் 70 வரை நல்லூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்தார்.
என்ற தனதுநூலில் டார்சி விட்டாச்சி இனக்கலவரம் குறித்து இவ்வாறு எழுதினார்- கலவரங்கள் தன்னெழுச்சியானவை இல்லை என ஆளுநர் நாயகம் செய்தியாளர் மாநாட்டில் உத்தியோகபற்றற்ற விதத்தில் தெரிவித்தார் என்ற தகவல்கள் குயின்ஸ்ஹவுசிலிருந்து வெளியாகின.
கனவான்களே இது இனவாதத்தின் தன்னெழுச்சி என நீங்கள் நினைத்தால் நீங்கள் நினைப்பது தவறு இது மக்களின் பின்னாலிருந்து செயற்பட்ட சூத்திரதாரியொருவரின் வேலை அவர் மிகவும் கவனமாக இதனை திட்டமிட்டார் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அவருக்கு தெரிந்திருந்தது இது இரண்டு வருடங்களிற்கு முன்னர் வைக்கப்பட்ட வெடிகுண்டு தற்போது வெடித்துள்ளது - என அவர் தெரிவித்திருந்தார்.
eelam tamil platform for the documentation of genocide
ரஜீபன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM