எம்மில் சிலருக்கு தொடையின் பின்பகுதி மற்றும் கெண்டைக்கால் பகுதியில் வலி ஏற்படும். அதிலும் குறிப்பாக தடகள விளையாட்டு வீரர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம்.
இத்தகைய வலி ஏற்படுவதற்கு எம்முடைய முதுகு தண்டு பகுதியிலிருந்து கால் பகுதிக்கு செல்லும் சயாட்டிகா எனும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள் தான் காரணம் என குறிப்பிடலாம்.
இத்தகைய வலியை மருத்துவர்கள் சயாட்டிகா வலி என வகைப்படுத்துகிறார்கள். இதற்கு தற்போது நவீன முறைகளான சிகிச்சை அறிமுகமாகி முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
Piriformis எனும் எம்முடைய தொடை பகுதியில் உள்ள தசைகளில் இறுக்கம் அல்லது பாதிப்பு ஏற்பட்டாலும் இத்தகைய வலி உண்டாகும். வலி ஒரு காலில் ஏற்பட்டிருக்கிறதா? அல்லது இரண்டு காலிலும் ஏற்பட்டிருக்கிறதா? என்பதனை பொறுத்து இந்த நரம்பில் ஏற்பட்டிருக்கும் அழுத்தம் கண்டறியப்படுகிறது.
இவர்களுக்கு எக்ஸ்ரே, எம் ஆர் ஐ, சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளுடன் எலெக்ட்ரோமயோகிராபி எனப்படும் நரம்பின் அழுத்தத் திறன் குறித்த பரிசோதனை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மை துல்லியமாக அவதானிக்கப்பர். இதற்குப் பிறகு தசைகளை வலுவூட்டும் இயன்முறை பயிற்சி, பிஸிக்கல் தெரபி, ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவற்றின் மூலம் இத்தகைய பாதிப்பிற்கு முதன்மையான நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது. வெகு சிலருக்கு மட்டும் நரம்பில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை களைவதற்கு சத்திர சிகிச்சை அவசியப்படலாம்.
டொக்டர் இந்துமதி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM