யாழில் நகை மற்றும் பணத்தினை திருடிய பெண் அதிரடியாக கைது

Published By: Digital Desk 3

23 May, 2023 | 11:00 AM
image

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அச்செழு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 18 ஆம் திகதி,  அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தாலி, தாலிக்கொடி, மோதிரம் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்த நிலையில், இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்த விடயமானது காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் திங்கட்கிழமை (22) அச்செழு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து, தாலி மற்றும் தாலிக்கொடியை விற்று வாங்கிய சங்கிலி மற்றும் தோடு, ஒரு தொகை பணம், உருக்கிய நிலையிலான தங்கம் என்பன மீட்கப்பட்டன.

 காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் அசேல வத்துக்கார அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண், மீட்கப்பட்ட தங்கத்துடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08
news-image

தமிழ்த்தேசியக்கட்சிகள் பொதுக்குறிக்கோளின் அடிப்படையில்; புதிய கூட்டமைப்பை...

2025-02-10 19:19:25