எக்ஸ்பிரஸ்பேர்ள் நியுடயமன்ட் கப்பல்களில் தீவிபத்து ஏற்பட்டவேளை இந்தியா செய்த உதவிக்காக இலங்கை 890 மில்லியன் ரூபாய்களை திருப்பி செலுத்தவேண்டியுள்ளது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
890மில்லியன் ரூபாயை திருப்பி செலுத்துமாறு இந்தியா உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை விமானப்படை மற்றும் அரசாங்கம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் நியுடயமன்ட் கப்பலில் மூண்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கடற்படை உதவியது இதன் மூலம் சூழலிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பை கட்டுப்படுத்த உதவியது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர்கள் 400மில்லியன் இந்திய ரூபாயை கோரியுள்ளனர் ( 1400 மில்லியன் ரூபாய்) என தெரிவித்துள்ள நீதியமைச்சர் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் மூண்ட தீயை அணைப்பதற்காக இந்தியா 490 மி;ல்லியனை கோரியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2020 செப்டம்பர் 3ம் திகதி நியுடயமன்ட் கப்பலில் தீப்பிடித்தது -சங்கமன்கந்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM