பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் 92 மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் - வைத்தியசாலையில் அனுமதி

22 May, 2023 | 09:53 PM
image

பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களில் 10 பேர் அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக் பெற்றுக் கொண்டு வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் ஏதேனும் வைரஸ் நோய் பரவுகின்றதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகர்களுக்கு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து இன்று வைத்தியசாலைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

 அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31