பிரம்ம கமலம்' : உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் 3ஆம் ஆண்டு பூர்த்தி நிகழ்வு

22 May, 2023 | 09:09 PM
image

உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின்3ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸூம் (zoom) இணையவழியூடாக 'பிரம்ம கமலம் -3' நிகழ்வு திங்கட்கிழமை 22ஆம் திகதி  மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது.

இச்சங்கத்தின் அமைப்பாளரான அபிநயஷேத்ரா நடனப்பள்ளியின் இயக்குநர் கலாசூரி திவ்யா சுஜேன் மற்றும் சங்கத்தின் செயலாளரான நிறைஞ்சனா சுரேஸ் (லண்டன்) ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

பிரபல இந்திய பரதநாட்டியக் கலைஞரான பத்மபூஷன் C.V சந்திரசேகரின் பிறந்தநாளன்று நிகழும் இந்த பிரம்ம கமலம்-3  வைபவமானது பிரபல பரதநாட்டிய தம்பதியான V.P தனஞ்செயன்  - சாந்தா தனஞ்செயன் தலைமையில் நிகழ்கிறது.

இந்த ஆண்டு முனைவர்  பட்டம் பெற்று இலங்கைக்குப் பெருமை சேர்த்த சங்கத்து நடன ஆசிரியர்களை கௌரவிக்கும் விழாவாகவும் அமையும் இந்நிகழ்வில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தன் முதன்மை விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக சென்னை பரதகலாஞ்சலி மாணவியும் த்ரயீ நாட்டியப்பள்ளி இயக்குநருமான பிரபல நாட்டியக் கலைஞர் கலைமாமணி, கலாநிதி ராதிகா சுரஜித்தும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வு விபரம்:

Zoom ID - 894 6946 7864

Passcode - GASBA123

 22/05/2023 மாலை  6 மணி (இலங்கை நேரப்படி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35
news-image

சமூக சேவையாளர் செல்வராசா முரளீதரனுக்கு மெல்போர்ன்...

2023-05-27 12:13:28
news-image

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின் 'இலண்டனிலிருந்து...

2023-05-26 18:12:46
news-image

பன்வில பிரதேச மாணவர்களுக்கு புத்தகங்கள், கற்றல்...

2023-05-26 21:11:21