மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் ஒரே நாளில் இரு விபத்துக்கள் : ஒருவர் உயிரிழப்பு; மற்றொருவர் காயம்! 

Published By: Nanthini

22 May, 2023 | 05:41 PM
image

ட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பிளாமடு பிரதேசத்தில் வீதியின் குறுக்கே உள்ள மழைநீர் வழிந்தோடும் வடிகான் பள்ளத்தின் ஊடாக பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் குப்பிளாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய லோகிதராஜா கோவிந்தராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

குறித்த நபர் நேற்றிரவு 8.30 மணிக்கு  மட்டக்களப்பில் இருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது குப்பிளாமடு வீதியின் குறுக்கே உள்ள மழைநீர் வழிந்தோடும் பள்ளத்தில் இருந்து மேலே செல்லும்போதே மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி, மரத்துடன் மோதியுள்ளது. 

‍இதன்போது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக் கொண்டான் பிரதேசத்தில் வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதப்பட்ட மற்றுமொரு விபத்துச் சம்பவமும் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த நபரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11