கர்ம நட்சத்திரங்கள் எது ? இதற்கான பிரத்யேக பரிகாரம் என்ன..?

Published By: Digital Desk 5

22 May, 2023 | 01:10 PM
image

எம்மில் சிலர் வாழ்க்கையை வெற்றிகரமாக தொடங்குவதற்கு சோதிட நிபுணர்களின் வழிகாட்டலை நாடுவர். அவர்களுக்கு சோதிட நிபுணர்களும் அவர்களின் ஜாதகத்தை ஆய்ந்து, இந்தத் துறையில் பயணித்தால் வெற்றி அடையலாம் என அவதானித்து சொல்வர். ஜாதகரும் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப சோதிடர் அறிவுறுத்திய துறையில் பயணிக்கத் தொடங்குவர். 

சில மாதம்... சில ஆண்டுகள்... கழித்தும் எதிர்பார்த்த குறைந்தபட்ச வெற்றியைக் கூட அவர்களால் எட்ட இயலாது. இதன் காரணமாக அவர்கள் மனதளவில் சோர்வடைந்து, சோதிடத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, தங்களது உழைப்பை மட்டும் நம்பி.. தங்கள் பாணியில் வாழ்க்கையை நடத்திச் செல்வர். இவர்களுக்கு சோதிட நிபுணர்கள் வெற்றி பெறுவதற்கான சூட்சமமான பிரத்யேக பரிகாரத்தை முன் வைக்கிறார்கள்.

உங்களுடைய சோதிடர் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து உங்களுக்கு சாதகமான விடயங்களை முன்வைத்திருப்பார். ஆனால் நீங்கள் பிறந்தது கர்ம நட்சத்திரமாக இருந்தால்.. நீங்கள் எவ்வளவுதான் வாழ்க்கையில் போராடினாலும், வெற்றி என்பது குறைந்த அளவிற்கு மட்டுமே கிட்டும். ஏனெனில் உங்களது வெற்றியை... நீங்கள் பிறந்த கர்ம நட்சத்திரம் தாமதப்படுத்துகிறது.

மேலும் கடந்த ஜென்மத்தில் உங்களுடைய முன்னோர்கள் மேற்கொண்ட கர்ம வினைகள் காரணமாகவே இந்த ஜென்மத்தில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள். இந்த சூட்சுமத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சோதிட வல்லுநர்களின் கருத்துப்படி ஒவ்வொரு ராசியிலும் ஒரு நட்சத்திரம் கர்ம நட்சத்திரம் என்றும், தனுசு ராசியில்  இடம்பெற்றிருக்கும் மூன்று ராசிகளும் கர்ம நட்சத்திரம் என்றும் வரையறுத்திருக்கிறார்கள். 

அந்த வகையில் மேஷ ராசியில் இடம் பிடித்திருக்கும் அஸ்வினி (அசுபதி), ரிஷப ராசியில் இடம் பிடித்திருக்கும் மிருகசீரிஷம், மிதுன ராசியில் இடம் பெற்றிருக்கும் திருவாதிரை, கடக ராசியில் இடம் பிடித்திருக்கும் ஆயில்யம், சிம்ம ராசியில் இடம் பிடித்திருக்கும் பூரம், கன்னி ராசியில் இடம் பிடித்திருக்கும் ஹஸ்தம், துலாம் ராசியில் இடம் பிடித்திருக்கும் சித்திரை, விருச்சிக ராசியில் இடம் பிடித்திருக்கும் அனுஷம், தனுசு ராசியில் இடம் பிடித்திருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள், அதனைத் தொடர்ந்து மகர ராசியில் இடம் பிடித்திருக்கும் அவிட்டம், கும்ப ராசியில் இடம் பிடித்திருக்கும் பூரட்டாதி, மீன ராசியில் இடம் பிடித்திருக்கும் உத்திரட்டாதி ஆகிய பதினான்கு நட்சத்திரங்கள் கர்ம நட்சத்திரங்கள் என வரையறை செய்திருக்கிறார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள் தங்களது வாழ்க்கையில் கர்ம நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், கர்ம வினைகளின் தாக்கம் அதிகமிருக்கும். சாதாரண பலன்களை பெறுவதற்கும் இவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். இவர்கள் தங்களது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் அல்லது தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்றால், பின்வரும் நாட்களில் பிரத்யேக பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

அதாவது மாதந்தோறும் வரும் அமாவாசை தினம், தமிழ் மாதத்தின் முதல் திகதி, வியதீ பாதம் மற்றும் வைதிருதி ஆகிய இரண்டு நாம யோகங்கள் இடம்பெறும் திகதி என மாதத்தில் நான்கு நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இந்த நான்கு நாட்களில் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் அன்னதானத்தை வழங்க வேண்டும். அந்த அன்னதானத்தை நீங்கள் உணவகங்களில் வழங்கலாம். 

நீங்களே தயாரித்தும் வழங்கலாம். இதற்கெல்லாம் பொருளாதார ரீதியாக சக்தி இல்லை என்றால், பச்சரிசி மாவு மற்றும் வெல்லம் ஆகியவற்றை வாங்கி, அவற்றை ஒன்றாக கலந்து உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள வேப்பமரம் போன்ற மரங்களுக்கு உணவாக இட வேண்டும். 

ஏதேனும் ஒரு வகையில் அன்னதானத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இவை உங்களுடைய கர்ம நட்சத்திரத்திற்கான கடந்த ஜென்ம கர்ம வினைகளை குறைத்து, இந்த ஜென்மத்தில் கிடைக்க வேண்டிய பலா பலன்கள் தொடர்ந்து வழங்கும். 

எனவே மேற்கண்ட பதினான்கு நட்சத்திரத்தில் அவதரித்தவர்கள், தங்களுடைய ஜென்ம நட்சத்திரம் கர்ம வினைகளை தாங்கி இருப்பதை உணர்ந்து, அதற்கான பிரத்யேக நாட்களில் அன்னதானத்தை வழங்குவதன் மூலம் நீங்கள் இந்த ஆயுள் முழுவதும் நல்ல பலனை பெற இயலும்.

தகவல் ரோஷன் நிதி

தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் கிடைக்க...

2023-05-31 12:49:27
news-image

கரசை கரணத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

2023-05-30 11:57:42
news-image

12 ராசிகளில் எந்த ராசிக்காரர் அதிகம்...

2023-05-27 11:40:57
news-image

நீங்கள் பிறந்த கிழமைக்கான பலன்கள்..?

2023-05-26 12:46:01
news-image

சாபங்களுக்கு பரிகாரங்கள் இருக்கிறதா..?

2023-05-24 15:01:26
news-image

உங்களது பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மயிலிறகு!

2023-05-23 13:33:51
news-image

கர்ம நட்சத்திரங்கள் எது ? இதற்கான...

2023-05-22 13:10:39
news-image

குரு பகவான் பயோடேட்டா

2023-05-20 14:01:08
news-image

கடன் தொல்லையிலிருந்து மீள தேங்காய் +...

2023-05-16 15:33:52
news-image

கஷ்டங்களை அகற்றும் 'தூங்கா விளக்கு' பரிகாரம்

2023-05-16 11:06:51
news-image

எந்தெந்த ராசியினருடன் சேர்ந்தால் அதிர்ஷ்டம் கிட்டும்?

2023-05-15 16:56:34
news-image

தெய்வக்குற்றம் உள்ளதா? கண்டறிந்து களைவது எப்படி?

2023-05-15 11:47:23