குஜராத்தின் வெற்றியை அடுத்து ப்ளே ஓவில் நுழைந்தது மும்பை

Published By: Nanthini

22 May, 2023 | 12:48 PM
image

(நெவில் அன்தனி)

வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்களால் மும்பை இண்டியன்ஸ் அமோக வெற்றியீட்டியது.

எனினும், சுமார் 5 மணித்தியாலங்கள் கழித்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரை குஜராத் டைட்டன்ஸ் வெற்றிகொண்ட பின்னரே மும்பை இண்டியன்ஸின் ப்ளே ஓவ் வாய்ப்பு உறுதியானது.

மும்பையின் வெற்றியில் கெமரன் க்றீன் 47 பந்துகளில் குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதம், அணித் தலைவர் ரோஹித் ஷர்மா பெற்ற அரைச்சதம், ஆகாஷ் மத்வாலின் 4 விக்கெட் குவியல் என்பன பிரதான பங்காற்றின.

அப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், மும்பை இண்டியன்ஸ் வீரர்கள் தங்களது இரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரங்கை சுற்றிவந்தனர்.

தனது அங்குரார்ப்பண ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி கன்னிச் சதம் குவித்த அவுஸ்திரேலியாவின் சகலதுறை வீரர் கெமரன் க்றீன், தனது அற்புதமான சக அணி வீரர்களின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார்.

"இங்கு சகல ஏற்பாடுகளும் பிரம்மாதம். நான் இங்கு மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறேன். எனது சக வீரர்களின் பங்களிப்பு அற்புதமானது" என ஆட்டம் முடிவில் கெமரன் க்றீன் குறிப்பிட்டார்.

இதுவரை 381 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ள கெமரன் க்றீனின் ஸ்ட்ரைக் ரேட் 159 ஆகும்.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது.

விவ்ராந்த் ஷர்மா, மயான்க் அகர்வால் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன், 83 பந்துகளில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரை விட துடுப்பாட்டத்தில் வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 18 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 201 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.

மொத்த எண்ணிக்கை 20 ஓட்டங்களாக இருந்தபோது இஷான் கிஷான் ஆட்டம் இழந்தார்.

ஆனால், ரோஹித் ஷர்மாவும் கெமரன் க்றீனும் 2ஆவது விக்கெட்டில் 68 பந்துகளில் 128 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ரோஹித் ஷர்மா அரைச் சதம் குவித்து ஆட்டம் இழந்த பின்னர், கெமரன் க்றீனுடன் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அத்துடன் கெமரன் க்றீன் சதம் குவிப்பதற்கும் ஒத்தாசையாக விளையாடினார்.

18ஆவது ஓவர் ஆரம்பமானபோது மும்பையின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், கெமரன் க்றீனின் சதத்துக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அந்த ஓவரின் முதல் பந்தில் சூரியகுமார் யாதவ் ஒரு ஓட்டத்தைப் பெற்று கெமரன் க்றீனுக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.

அடுத்த பந்தில் பவுண்டறி அடித்த கெமரன் க்றீன், 3ஆவது பந்தில் ஒற்றை ஒன்றை எடுத்தார்.

4ஆவது பந்தில் சூரியகுமார் யாதவ் அவசரமாக ஓட்டம் பெற்றபோது பந்துவீச்சாளர் எல்லையை நோக்கி எறியப்பட்ட பந்து டீப் தேர்ட் மேன் நிலையை நோக்கிச் சென்றது. கெமரன் க்றீனின் அதிர்ஷ்டம் பந்து பவுண்டறிக்கு செல்லவில்லை.

5ஆவது பந்தில் ஓட்டம் பெறத் தவறிய கெமரன் க்றீன் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் வெற்றி ஓட்டத்தைப் பெற்று, தனது சதத்தையும் பூர்த்திசெய்தார். கெமரன் க்றீன் 42 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களை விளாசினார்.

எண்ணிக்கை சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 200 - 5 விக் (மயான்க் அகர்வால் 83, விவ்ரந்த் ஷர்மா 69, ஹெய்ன்றிச் க்ளாசென் 18, ஏய்டன் மார்க்ராம் 13 ஆ.இ., ஆகாஷ் மத்வால் 37 - 4 விக்.)

மும்பை இண்டியன்ஸ் 18 ஓவர்களில் 201 - 2 விக். (கெமரன் க்றீன் 100 ஆ.இ., ரோஹித் ஷர்மா 56, சூரியகுமார் யாதவ் 25 ஆ.இ., இஷான் கிஷான் 14)

ஐ.பி.எல் அணிகளின் இறுதி நிலை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யங், லெதம் சதங்கள் குவிக்க, நடப்பு...

2025-02-19 23:53:09
news-image

புகழ்பூத்த சர்வதேச வீரர்களைக் கொண்ட 6...

2025-02-19 17:56:31
news-image

சம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தான்...

2025-02-19 13:11:21
news-image

மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை...

2025-02-19 10:17:58
news-image

முன்னேறி வரும் வீரருக்கான ஐசிசி விருதை ...

2025-02-18 16:06:10
news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆசிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-19 06:59:21
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02