உலக நாடுகள் அணுவாயுத உற்பத்திகளை இல்லாது செய்வதற்காக அணிசேர வேண்டும். என சீன ஜனாதிபதி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிற்சர்லாந்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உரையாற்றியுள்ள போதே அணுவாயுத இல்லாத உலகை உருவாக்க சகல நாடுகளும் அணிதிரள வேண்டுமென அழைப்புவிடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  

அடுத்து வரும் சந்ததியினருக்கு  அணு ஆயுதங்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை நிராகரிப்பதோடு, உலகத்திலிருந்து அணு ஆயுதங்களை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும். 

மேலும் உலகில் பலம் பொருந்திய நாடுகள் ஒவ்வொன்றும், ஏனைய சிறிய நாடுகளின் விதிமுறைகளை மதிக்க வேண்டும். ஒவ்வொரு பெரிய நாடும் தமது கோட்பாடுகளை மீறாமலும், சிறிய நாடுகளை ஆக்கிரமித்து தமது கொள்கையை அவற்றின் மீது திணிக்காத நிலை உருவாக வேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார் .  

மேலும் குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி, ஐ.நா.சபையின் புதிய பொதுச் செயலாளர் அண்டோனியா கட்டெரஸ்ஸை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.