AIA லங்காவின் பிரதம முகவர் நிறுவன அதிகாரியாக சானக லியனகே நியமனம்

Published By: Digital Desk 5

22 May, 2023 | 12:39 PM
image

2023 ஏப்ரல் 01 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் பிரதம முகவர் நிறுவன அதிகாரியாக சானக லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக AIA லங்கா மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. இலங்கை முழுவதும் வியாபித்துள்ள AIA இன் 100 கிளைகள், 4,000 வெல்த் பிளேனர்கள் மற்றும் 500 முகவர் நிறுவனத் தலைவர்களுடன் AIA லங்காவின் முகவர் நிறுவன விற்பனை விநியோகத்தை இப்பதவி மூலமாகச் சானக பொறுப்பேற்றுக் கொள்கின்றார்.

AIA இன் தனித்துவமான வெல்த் பிளேனர்களை மையப்படுத்திய முகவர் நிறுவன விற்பனைப் பொறிமுறையின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி நிறுவனத்தின் முகவர் நிறுவனப் பாதையின் அடுத்த கட்டத்தை சானக தனது புதிய பதவி மூலமாக மிகச்சிறப்பாகவே வழிநடத்துவார்.

AIA லங்காவுடன் நவம்பர் 2019 இல் தனது பயணத்தைத் தொடங்கிய சானக குறுகிய காலப் பணிக்காக TATA AIA இந்தியாவிற்கு தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டு அங்கு ஸ்தாபிக்கப்ட்ட TATA AIA இன் முழு நேர முதன்மையான முகவர் நிறுவனத் திட்டக் குழுவில் அங்கம் வகித்திருந்தார். அதன்பிறகு நிறுவனத்தின் பிரதித் தலைமை முகவர் நிறுவன அதிகாரியாக செயல்பட்ட அவர் நிறுவனத்தின் முகவர் நிறுவனப் பொறிமுறையின் டிஜிட்டல் மாற்றத்தை வடிவமைப்பதில் மிகவும் முக்கிய பங்காற்றியிருந்தார்.

சானக தனது தொழில் பயணத்தை HSBC லங்காவில் வங்கி உதவியாளராக இணைந்து கொண்டு ஒரு வங்கியாளராகவே ஆரம்பித்திருந்தார். அதன் பின்னர் சிரேஷ்ட முகாமையாளராகப் பதவி வகித்து பின்னர் HSBC லங்காவில் விற்பனைத் தலைவராக இறுதியாக நிறைவு செய்திருந்தார். 

மேலும் அவர் சதேன் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுமானிப் பட்டமும் மற்றும் பட்டய மேலாண்மைக் கணக்கியல் நிறுவனத்தில் (CIMA) உயர் டிப்ளோமாவும் அத்துடன் பட்டய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் (CIM) சந்தைப்படுத்தல் டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். சானக 2016 முதல் SLIM இன் தேசிய விற்பனை காங்கிரஸின் (NASCO) மிகச்சிறந்த நீதிபதிகள் குழுவில் உறுப்பினராகவும் உள்ளதோடு, கொழும்பு 07 றோயல் கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவருமாவார்.

AIA இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சத்துரி முனவீர சானக்கவின் நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ‘AIA லங்காவில் எங்களது வெல்த் பிளேனர் முகவர் நிறுவன விற்பனை அணி குறித்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கின்றோம். உண்மையில் சானகவின் தலைமையின் கீழ் புதிய தலைமுறையினர் சிரேஷ்ட தலைமைப் பதவிகளை ஏற்கும் வகையில் இளம் தலைவர்களை உருவாக்குவது ஒரு சிறப்பான விடயமாகவேயுள்ளது.

நிதித்துறையில் சானக்கவின் பரந்துபட்ட பின்னணி, புதுமையான வணிக மேம்பாட்டு மனப்போக்கு மற்றும் துடிப்பான தலைமைத்துவப் பாணி ஆகியவை எங்கள் முகவர் நிறுவனப் பொறிமுறையின் விநியோகத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இது மக்களின் மேம்பாட்டுக்கான எங்களின் அர்ப்பணிப்பையும், இலட்சக்கணக்கான மக்கள் ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன், மிகச் சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்காக சேவை செய்வதற்கு இலங்கையில் எமது தனித்துவமான சந்தை மற்றும் வாடிக்கையாளர் பிரசன்னத்தை வளர்த்து விரிவுபடுத்துவதற்கான எமது லட்சியத்தை வெளிப்படுத்தி செயல்விளக்குகின்றது’ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

‘நான் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் துறையிலிருந்து வந்திருப்பதனால் எனது தொழில் பயணத்தில் ஆயுள் காப்பீடு எனக்கு இயற்கையாகவே மிகவும் பொருத்தமானதாக அமைந்திருந்தது. இலங்கையர்களைப் பாதுகாப்பதில் அயராது உழைத்து, உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நம்பும் AIA இன் சிறந்த வெல்த் பிளேனர் விற்பனை நிபுணர்களின் குழுவை வழிநடத்தும் வாய்ப்புக் கிடைத்தை எனது பாக்கியமாகவே நான் கருதுகின்றேன்.

நாங்கள் தற்போது உலகின் மிகப் பெரிய காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகவே திகழ்கின்றோம். மேலும் இலங்கையில் வலுவான டிஜிட்டல் மற்றும் பரந்துபட்ட கிளைகள் வலையமைப்புடன் கூடிய சிறந்த வெல்த் பிளேனர் குழுவை நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் செய்கின்றோம்.

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும், நாங்கள் தேர்ந்தெடுத்த சந்தைகளில் முன்னணியில் இருப்பதில் எங்கள் நிலையினை உறுதிப்படுத்துவதற்குமாக நாங்கள் ஒருமித்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்’ என சானக தனது புதிய பதவி குறித்துக் கருத்து தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் வங்கியின் கோடி அதிர்ஷ்டம் 2023...

2023-05-29 15:56:24
news-image

ஈவா அனுசரணையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய...

2023-05-25 10:11:01
news-image

DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ்...

2023-05-25 09:56:13
news-image

நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்க...

2023-05-25 10:09:50
news-image

'People’s Remittance கோடி அதிர்ஷ்டம்’ ஆண்டிறுதி...

2023-05-24 14:55:31
news-image

விளம்பரத்துறையை புதுப்பிக்க 3R உத்தியை இயக்க...

2023-05-22 20:19:51
news-image

DSI அதன் AVI வர்த்தகநாமத்தின் மீறலுக்கு...

2023-05-22 13:33:00
news-image

AIA லங்காவின் பிரதம முகவர் நிறுவன...

2023-05-22 12:39:22
news-image

அமானா வங்கி 'LankaPay டெக்னோவேஷன் விருதுகள்...

2023-05-18 17:08:15
news-image

பிசினஸ் டுடேயின் சிறந்த 40 நிறுவனங்கள்...

2023-05-18 14:31:58
news-image

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையானது...

2023-05-16 20:57:13
news-image

கடன் தள்ளுபடி குறித்த செய்திக்கு மக்கள்...

2023-05-16 21:25:27