இந்திய அணியின் யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 139 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்று தனது முதலாவது 150 ஓட்டத்தினை பூர்த்திசெய்துள்ளார்.

அதுமாத்திரமின்றி யுவராஜ் சிங் 6 வருடங்களுக்கு பிறகு சதமடித்து அசத்தியுள்ளார்.

இதேவேளை இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனி தலைமை பதவியிலிருந்து விலகிய பிறகு தனது முதலாவது சதத்தினை இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.

டோனி 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 381 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.